Home
Gadgets

அதிர வைக்கும் விலை.. 180 இன்ச்.. டால்பி ஆடியோ.. லேசர் புரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

தற்போது ஸ்மார்ட் டிவிகளை விட புரொஜெக்டர் மாடல்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பெரிய திரை, சிறந்த ஆடியோ மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தற்போது புரொஜெக்டர் மாடல்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான புரொஜெக்டர் மாடல்கள் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் Dangbei Atom (டாங்பே ஆட்டம்) என்ற நிறுவனம் காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேசர் புரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிர வைக்கும் விலை.. 180 இன்ச்.. லேசர் புரொஜெக்டர் அறிமுகம்..

Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் அம்சங்கள் (Dangbei Atom compact laser projector Specification): 1080 பிக்சல் ரெசல்யூஷன்-ஐ ஆதரிக்கிறது இந்த Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர். அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ் வீடியோ பார்மெட்களையும் இந்த லேசர் புரொஜெக்டர் ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த அதிநவீன புரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

1200 ஐஎஸ்ஒ லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் மாடல். மேலும் பின்பு இந்த லேசர் புரொஜெக்டர் ஆனது கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டரில் 180 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. மேலும் இதில் ALPD லேசர் லைட் ஆதரவு உள்ளது. அதேபோல் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோஃபோகஸ்(Auto Focus) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர்.

இமேஜ் புரொஜெக்சன் டூல், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர். எனவே இதை ஸ்மார்ட் சாதனங்களும் எளிமையாக கனெக்ட் செய்ய முடியும். குறிப்பாக காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் மாடல் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நெட்ஃபிக்ஸ், யூடியூப், டிஸ்னி+ போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர வைக்கும் விலை.. 180 இன்ச்.. லேசர் புரொஜெக்டர் அறிமுகம்..

லேப்டாப் விட மெல்லிய எடை கொண்டது இந்த Dangbei Atomகாம்பாக்ட் லேசர் புரொஜெக்டர். அதாவது 1.28 கிலோ எடை கொண்டுள்ளது இந்த லேசர் புரொஜெக்டர். மேலும் சாதாரண புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய லேசர் புரொஜெக்டர்.

தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டர் வாங்க கிடைக்கிறது. விரைவில் இது அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக Dangbei Atom காம்பாக்ட் லேசர் புரொஜெக்டரின் விலை $899 (இந்திய மதிப்பில் ரூ.74,616) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dangbei Atom compact laser projector launched: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X