ரூ.15,490-விலையில் அசத்தலான தைவா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

இந்திய சந்தையில் சியோமி, எல்ஜி, சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக தற்சமயம்
பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் 40-இன்ச் (D40B10) ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது தைவா நிறுவனம்.

ரூ.15,490-விலையில் அசத்தலான தைவா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அதிக கவனம் செலத்தியுள்ளது தைவா நிறுவனம். குறிப்பாக முன்னணி இணையதளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி மாடலை எளிமையாக வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே மற்றும் பிக்சல்:

டிஸ்பிளே மற்றும் பிக்சல்:

தைவா 40-இன்ச் (D40B10) ஸ்மார்ட் டிவி மாடல் எல்இடி டிஸ்பிளே மற்றும் 1366 ஒ 768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு ஏ-பிளஸ் கிரேட் பேனல் மற்றும் 16.7எம் கலர் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் ஒவ்வொரு
படத்தையும் மிகத் தெளிவாக காட்டும்.

சினிமா ஜூம்

சினிமா ஜூம்

3டி காம்போ ஃபில்டர், சினிமா ஜூம் வசதி, மல்டி டிஸ்பிளே செயல்பாடு, போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள முக்கிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

20வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்

20வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்

20வாட் பாக்ஸ் ஸ்பீக்கர், பின்பு இவற்றுடன் ஒருங்கிணைந்த பவர் ஆடியோ வால்யூம் அமைப்பு இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி பாஸ், டிரிபிள் மற்றும் வால்யூம் ஆகியவற்றை சரிசெய்ய முடியும்,
இதனால் பயனர்களுக்குத் தேவையான ஒலியை கட்டுப்படுத்த முழு அணுகலையும் வழங்குகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

தைவா 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை பொறுத்தவரை ரூ.15,490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Daiwa launches D40B10 LED TV for Rs 15,490: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X