ரூ.12,490-விலை: தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி அறிமுகம்.!
இந்திய சந்தையில் தைவா நிறுவனம் தற்சமயம் 32-இன்ச்("D32C4S" ) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது
இந்திய சந்தையில் தைவா நிறுவனம் தற்சமயம் 32-இன்ச்("D32C4S" ) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தைவா ஆண்ட்ராய்டு ஸமார்ட் டிவி சரவுண்ட் சவுண்ட் அம்சம் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
தைவா 32-இன்ச் ("D32C4S" ) சாதனம் பொதுவாக குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த சாதனம் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த திரை அனுபவம் கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
3டி காம்போ ஃபில்டர், சினிமா ஜூம் வசதி, மல்டி டிஸ்பிளே செயல்பாடு, போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள முக்கிய அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் பொருந்து வகையில், எம்.காஸ்ட் மற்றும் இ-ஷேர் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள உள்ளடக்க சவுண்டு பார் ஆடியோ தொழில்நுட்பம் மூலம், பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான சரவுண்ட் சவுண்ட் பெறலாம் என்பதோடு, ஊக்கம் மிகுந்த டிவீட்டர்கள் மற்றும் சிறந்த பாஸ் அம்சத்தை பெறலாம்.
2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை பொறுத்தவரை ரூ.12,490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications