2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!
பிரபலமான நிறுவனம் தைவா இந்திய சந்தையில் 32-இன்ச் ('D32S7B') மற்றும் 39-இன்ச் ('D40HDRS')மாடல்களை 2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் லுமினிட் எச்ஆர்டிபி தொழில்நுட்ப வசதி
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு தைவா ஸ்மார்ட் டிவி மாடல்களும் 1366X768 ரெசல்யூஷன் மற்றும் ஏ பிளஸ் கிரேடு பேனல் வசதகளை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவிகளில் 16.6 மில்லியன் வண்ணங்கள் மற்றும் குவாண்டம் லுமினிட் எச்ஆர்டிபி தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவி மாடல்கள் 60 ஹெர்ட்ஸ் புதிப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

குவாட்-கோர் பிராசஸர்
தைவா 32-இன்ச் (‘D32S7B') மற்றும் 39-இன்ச் (‘D40HDRS') மாடல்கள் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கிரிக்கெட் பிக்சர் மோட்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிவி மாடல்களில் கிரிக்கெட் பிக்சர் மோட் எனும் வசதி உள்ளது, இதுவிளையாட்டு பார்வை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. பின்பு ஆடியோ சாதனங்களையும் இணைக்க புளூடூத் வசதியை கொண்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

20வாட் பில்ட்-இன்-ஸ்பீக்கர்
மேலும் தைவா நிறுவனத்தின் 39-இன்ச் டிவி மாடலில் 20வாட் பில்ட்-இன்-ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோல்32-இன்ச் டிவி மாடலில் ஸ்போர்ட்ஸ் சரவுண்ட் சவுண்ட் கொண்ட 20வாட் ஸ்பீக்கர் உள்ளது.

குறிப்பாக இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் தனிப்பயன் வடிவமைக்கப்பட்ட UI - BIG WALL உடன் தொகுக்கப்பட்டுள்ளன, இது அதிகாரப்பூர்வ பயன்பாடுகளுடன் 17,00,000+ மணிநேர உள்ளடக்கத்தை வழங்குகிறது.

அதிகாரப்பூர்வ ஆப்
இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளிலும் கிளவுட் டிவி சான்றளிக்கப்பட்ட AOSP ஆல் இயக்கப்படுகிறது, எனவே ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ், வூட், சன் என்எக்ஸ்டி, ஜியோ சினிமா போன்ற அதிகாரப்பூர்வ ஆப் பயன்பாடுகளைபயன்படுத்த முடியும்.

மிராகாஸ்ட் மற்றும் ஈ-ஷேர் வசதி
புதிய தைவா ஸ்மார்ட் டிவிகளில் மிராகாஸ்ட் மற்றும் ஈ-ஷேர் வசதி, 2 யூ.எஸ்.பி மற்றும் 2 எச்.டி.எம்.ஐ போர்ட்டுகள் உள்ளன. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான விலை
39-இன்ச் கொண்ட ‘D40HDRS' தைவா ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,490-ஆக உள்ளது.
32-இன்ச் கொண்ட ‘D32S7B' தைவா ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.9,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








