ஏஐ- தொழில்நுட்ப வசதியுடன் தைவா ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!
ஜப்பானிய நிறுவனமாக தைவா விரைவில் பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது தைவா நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த வன்பொருள் மற்றும் மன்பொருள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய நிறுவனமாக தைவா விரைவில் பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

தைவா:
தைவா நிறுவனம் தற்சமயம் D50QUHD-M10 (49-இன்ச்) மற்றும் D55QUHD-M10 (55-இன்ச்) என்ற இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டிவி மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் லுமினிட் டிஸ்பிளே அமைப்புடன் வெளிவந்துள்ளது. 95சதவீதம் சிறந்த கலர் ஆதரவு கொடுக்கிறது.

பிக்சல் திர்மானம்:
இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, அதன்பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த டிவி மாடல்கள் A + Grade Panelகொண்டிருக்கும், பின்பு 6000000:1
காண்ட்ராட்ஸ் விகதித்தை வழங்குகிறது.

ஆண்ட்ராயடு 7.0:
இந்த சாதனங்கள் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஏஐ-தொழில்நுட்பம் மூலம் இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்க முடியும்,அதாவது பயனர்கள் குரல் கட்டளை மூலம் டிவி கட்டுப்படுத்த முடியும். பின்பு பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

சேமிப்பு:
தைவா ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

விலை:
வெப் பே ரீமோட், QWERTY கீபேட், எச்டிஎம்எஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் சிறந்த ஆடியோ வசதியுடனும் இந்த டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.
D50QUHD-M10 (49-இன்ச்) விலைப் பொறுத்தவரை ரூ.32,990-ஆக உள்ளது.
D55QUHD-M10 (55-இன்ச்) விலைப் பொறுத்தவரை ரூ.42,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications