Home
Gadgets

மிகவும் எதிர்பார்த்த தைவா D26K10 எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.!

தைவா எல்.ஈ.டி டிவிக்கள் குறுகிய பேசில்களை மேல் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கொண்டுள்ளன.

ஜப்பானிய நிறுவனமான தைவா தனது புதிய பிராண்டான D26K10 24 இன்ச் எல்இடி டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களில் கிடைக்கும் இதன் இந்திய விலை ரூ. 7,999. இந்தியாவில் தற்போது ஏகப்பட்ட டிவிக்கள் விலையில் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகமாகின்றன. ட்ரூவிஷன், சியோமி போன்ற பிராண்டுகள் தங்களின் உயர் தொழில்நுட்ப பொருட்களை சிறந்த விலையில் வழங்குகின்றன.

மிகவும் எதிர்பார்த்த தைவா D26K10 எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.!

ஆனால் தைவா-வை பொறுத்து வரை நிலைமை அதுவல்ல. அதன் தயாரிப்புகள் உயர்தொழில்நுட்ப கருவிகளாக இல்லாவிட்டாலும், ஊரகப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் குறைத்த விலை துவக்கநிலை தொலைக்காட்சியாக இருக்கின்றன.

எல்இடி திரையுள்ள 24 இன்ச் எச்டி டிவி என்பதை தவிர்த்து பெரிதாக சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் சிறப்பம்சங்கள் இல்லை. இதனை அறிமுகப்படுத்தியவுடன் ஆராய்ந்து மதிப்பீடு செய்துள்ளதை இங்கே தொகுத்துள்ளோம்.

மிகவும் எதிர்பார்த்த தைவா D26K10 எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.!

டிசைன் மற்றும் கனெக்டிவிட்டி
தைவா எல்.ஈ.டி டிவிக்கள் குறுகிய பேசில்களை மேல் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கொண்டுள்ளன. 24இன்ச் எச்.டி திரையானது 1366×768 பிக்சல் மற்றும் 16.7 மில்லியன் டைனமிக் நிறங்களை தரக்கூடியது. இந்த திரையில் 178டிகிரி கோணத்தில் இயங்கும் சினிமா ஜூம் வசதி உள்ளது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, தைவா டிவியில் ப்ளூடூத் வசதி உள்ளது. பின்புறத்தில் 2 யூ.எஸ்.பி போர்ட், ஆடியோ வீடியோ மற்றும் 1 வி.ஜி.ஏ வெளியீடு வசதியும் உள்ளது. இதன் மூலம் டிவியை கணிணி அல்லது லேப்டாப்புடன் இணைத்து சிறப்பான அனுபவத்தை பெறலாம். மேலும் இதில் கூடுதலாக ஆடியோ ஸ்பீக்கர்களையும் இணைக்கலாம். ஆனால் பெரும்பாலான டிவிக்களில் ப்ளூடூத் வசதிகள் இருப்பதில்லை.

மிகவும் எதிர்பார்த்த தைவா D26K10 எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.!

மென்பொருள்
இது சாதாரண தொலைக்காட்சி என்பதால், ஆண்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதில்லை. ஆனால் இந்த தைவா D26K10 டிவிக்களில் பொழுதுபோக்க பல கேம்கள் உள்ளன. இதில் உள்ள பேக்லைட் மோட் மூலம் பயனர்கள் எல்.ஈ.டி டிவியின் பேக் லைட்டை கட்டுப்படுத்தலாம். இந்த வசதியின் மூலம் சந்தையிலேயே குறைவான மின்சாரம் பயன்படுத்து டிவியாக இது இருக்கும் என சொல்கிறது தைவா.
மிகவும் எதிர்பார்த்த தைவா D26K10 எல்இடி டிவி இந்தியாவில் அறிமுகம்.!

சிறப்பானதா தைவா டிவி?
திரையின் தரத்தை பற்றி பேசும் போது, தைவா எல்.ஈ.டி டிவி தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. கணிணியுடன் டிவியை இணைத்து பல்வேறு வகை வீடியோக்களை ஒளிபரப்பி பரிசோதித்ததில், முடிவு மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்தது. எச்.டி வீடியோக்கள் மிகவும் துல்லியமாக இருந்தன. 24 இன்ச் டிவியாக இருந்தாலும் எச்.டி ரிசல்யூசன் பக்காவாக இருந்தது.

இந்த டிவி பல்வேறு சிறம்பம்சங்களை பெற்றிராவிட்டாலும், கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் சிறப்பாக உள்ளன. மேலும் ஒரு வருட உத்திரவாதமும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Daiwa D26K10 LED TV review A value for money offering; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X