ரூ.66,990-க்கு 65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV

|

இந்தியாவில் புதிய 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது தைவா நிறுவனம். அதை வாங்கும் முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில காரியங்களை கீழே அளித்துள்ளோம்.

65-இன்ச் தைவா 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV

தனது நவீன தொழில்நுட்பம் மற்றும் பட்ஜெட் பிரிவில் வரும் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தைவா நிறுவனம் பிரபலமானது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் மூலம் 65 இன்ச் 4K அல்ட்ரா HD குவான்டம் லுமினிட் ஸ்மார்ட் LED TV-யை அறிமுகம் செய்துள்ளது. இது வரை இல்லாத அளவில் அதிக பகுப்பாய்வு திறனுடன் புதிய தரத்தை எட்டும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 65 இன்ச் 4K TV-இல், ஒரு அல்ட்ரா-ஸ்லீம் பேசில் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் 4K தெளிவுடன் ஒளிர்வும் HDR X விவரங்களைப் பெற்றுள்ளது. இதன் ஸ்கிரீன் 3840x2160 பிக்சல் அளவிலான பகுப்பாய்வையும், A+ கிரேடு பேனல் பெற்றுள்ளதால் 1.07 பில்லியன் நிறங்களைக் கொண்ட டிஸ்ப்ளே நிறத்தை அளிக்கிறது. ஒரு 4K ஊக்கி மூலம் நாம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், முழு HD மற்றும் 4K உள்ளடக்க வெளியீடு, படத்தை உருவாக்குதல், டிவி ஷோ அல்லது டிஜிட்டல் மீடியா கிளியரர் ஆகியவற்றை லைப்லைக் 4K பகுப்பாய்வு தரத்தில் அளிக்கிறது.

இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 7.0 பதிப்பில் இயங்குவதோடு, 1GB RAM மற்றும் 8GB உள்ளக நினைவகத்தை பெற்றுள்ளது. மேலும் வைஃபை ஆதரவு மூலம் இன்டர்நெட் இணைப்பை இயக்கவும், பிற பொழுதுபோக்கு அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும் ஏதுவாக உள்ளது. அதேபோல இந்த ஸ்மார்ட் சாதனத்தின் ஸ்கிரீனை தங்கள் டிவியில் கொண்டு வந்து, பொழுதுபோக்கு உலகை ஒரு பெரிய திரையில் பயனர்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகியவற்றில் பொருந்து வகையில், எம்.காஸ்ட் மற்றும் இ-ஷேர் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள உள்ளடக்க சவுண்டு பார் ஆடியோ தொழில்நுட்பம் மூலம், பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான சரவுண்ட் சவுண்ட் பெறலாம் என்பதோடு, ஊக்கம் மிகுந்த டிவீட்டர்கள் மற்றும் சிறந்த பாஸ் அம்சத்தை பெறலாம்.

தைவா 4K TV இல், ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இயங்ககூடிய ஒரு ஏஐ அடிப்படையில் இயங்கும் சென்ஸி தொழில்நுட்பம் (வாய்ஸ் கமெண்ட் மூலம்) பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பம், ஒரு டிவி கைடு அப்ளிகேஷனாக செயல்பட்டு, செட்-பாக்ஸில் இருந்து நேரடியாக இயக்கக் கூடிய வகையில் ஒரு சுவராக செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் டிவி ரிமோட் கொண்டு செட் டாப் பாக்ஸ் இயக்குவது முதற்கொண்டு எல்லா பணிகளையும் பயனர்கள் இயக்கலாம்.

இந்த டிவி பல்வேறு இணைப்பு தேர்வுகளுடன் வருகிறது. இதில் 3 தனித்தன்மையுள்ள HDMI உள்ளீடுகள், 2 USB உள்ளீடுகள் மற்றும் மியூஸிக் சிஸ்டம் அல்லது உயர்தர சவண்டு பார்களுக்கான 1 ஆப்டிக்கல் வெளியீடு ஆகியவற்றை உள்ளிடக்கியது. ஒரு சிறந்த இன்டர்நெட் இணைப்பு தேர்வு, இதர்நெட் போர்ட் ஆகியவையும் இந்த டிவில் கிடைக்கிறது.

அமேசான், பேடிஎம் மற்றும் இந்தியாவில் உள்ள பிற முன்னணி விற்பனையகங்களில் இந்த தயாரிப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Daiwa announces 65-inch 4K Ultra HD Quantum Luminit Smart LED TV for Rs 66,990 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X