Home
Gadgets

50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.! விலை இவ்வளவு தான்.!

இந்தியாவில் Daiwa நிறுவனம் புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல் (

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டைவா 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல் (Daiwa 4K UHD Smart TV D50162FL) மாடல் ஆனது 3,840x2,160 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் மூன்று பக்கங்களிலும் "பிரேம்லெஸ்" வடிவமைப்பை கொண்டுள்ளது எனவே இது சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் இதன் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் 96% ஆகும்

டைவா 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல்

டைவா 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல் மாடலின் கீழ் பக்கத்தில் மெலிதான பெஸல் உள்ளது. பின்பு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் மற்றும் 10,00,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ விகிதம் இவற்றுள் அடக்கம்.

 50-இன்ச் 4கே டிவி ஆனது ஏ 55

மேலும் இந்த 50-இன்ச் 4கே டிவி ஆனது ஏ 55 குவாட் கோர் சிபியு மற்றும் மாலி-ஜி 31 எம்பி 2 ஜி.பீ.யூ மூலம் இயக்கப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 2ஜிபி ரேம்

குறிப்பாக இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் ஆடியோவிற்காக 20 வாட் ஸ்பீக்கர்கள் ஆதரவு இவற்றுள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 50162 எஃப்எல்  மாடல்.

2.4GHz வைஃபை, ப்ளூடூத், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஆப்டிகல் அவுட் போர்ட், ஈதர்நெட் போர்ட், ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டைவா 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல் மாடல்.

பின்பு உங்களது ஸ்மார்ட்போனை

அதேபோல் இந்த 50-இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்கள் வழியிலான screen mirroring-ஐ ஆதரிக்கிறது. பின்பு உங்களது ஸ்மார்ட்போனை இதனுடன் ஏர் மவுஸாகவும் பயன்படுத்தலாம்.

யூடியூப், டிஸ்னி +

அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ், வூட், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த 50-இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவியின் எடை 9 கிலோ என்று கூறப்பட்டுள்ளது.

 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி

இந்தியாவில் டைவா 4 கே யுஎச்.டி ஸ்மார்ட் டிவி டி 50162 எஃப்எல் மாடல் ரூ.39,990-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தை முன்னணி ரீடெயில் கடைகளில் வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சொந்த வலைத்தளத்தில் தற்போது இந்த டி.வி-ஐ அவுட் ஆப் ஸ்டாக் என்று பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Daiwa 50-inch 4K Smart TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X