Home
Gadgets

பிளிப்கார்ட் தரமான செய்கை.. ரூ.14059 பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போதும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Daiwa 43 inch QLED 4K Smart Google TV) 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,559 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.14059 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் தரமான செய்கை.. ரூ.14059 பட்ஜெட்ல டால்பி ஆடியோ..

டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Daiwa 43 inch 4K Smart Google TV Specifications): தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 5 சவுண்ட் மோட்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

குறிப்பாக அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் டைவா 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 16:09 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

சக்திவாய்ந்த ஏஆர்எம் குவாட் கோர் எ55 (ARM Quad Core A55) பிராசஸர் உடன் டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் G31 கிராபிக்ஸ் பிராசரஸர் இந்த டிவியில் உள்ளது.

அதுவும் கூகுள் டிவி ஓஸ் (Google TV OS) மூலம் இந்த டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.

பிளிப்கார்ட் தரமான செய்கை.. ரூ.14059 பட்ஜெட்ல டால்பி ஆடியோ..

யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். குரோம் காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த டைவா ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதுவும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் இதன் ரிமோட்டில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Daiwa 43 inch QLED 4K Google TV available at 70 percent discount in Flipkart Big Bang Diwali Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X