காம்ப்ஸ் உடன் Smartwatch.. தூள் பறக்கப்போகும் விற்பனை.. CULTSPORT வாட்ச்னா சும்மாவா? விலையும் ரொம்ப கம்மி..
கல்ட்ஸ்போர்ட் (Cultsport) நிறுவனம் இப்போது ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் (CULTSPORT Forge XR) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கல்ட்ஸ்போர்ட் (Cultsport) நிறுவனம் கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் (CULTSPORT Forge XR) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ரக்டு டிசைன் உடன் பில்ட்-இன் காம்பஸ் உடன்அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் கல்ட்ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 (CULTSPORT Ranger XR1) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகத்தை தொடர்ந்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் (CULTSPORT Forge XR):
இந்த புதிய கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் (CULTSPORT Forge XR) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.43" இன்ச் டிஸ்பிளே உடன் மல்டிபிள் கஸ்டமைஸ் வாட்ச் ஃபேஸ் அம்சத்துடன் வருகிறது. இது ப்ளூடூத் கால்லிங் அம்சம் மற்றும் டயல் பேட் அம்சம் போன்ற பல ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களை ஆதரிக்கிறது.
இந்த கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. இது ஹெல்த் மானிட்டரின் மற்றும் ஹார்ட் ரேட் கண்காணிப்பு போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. புதிய கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் 300mAh பேட்டரி உடன் ஒரே சார்ஜில் 8 நாட்கள் வரை நீடிக்கும் ஆயுளை கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சம் விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் சிறப்பம்சம் (CULTSPORT Forge XR Specifications):
- 1.43″ எச்டி அமோலேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
- இது 466 x 466 பிக்சல் (pixels) உடன் ஆல்வேஸ் ஆன் (always-on AMOLED screen) டிஸ்பிளேவாக வருகிறது.
- 700 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness)
- மல்டிபிள் வாட்ச் ஃபேஸ் (Multiple watch faces)

- ப்ளூடூத் கால்லிங் சப்போர்ட் (Bluetooth Calling Support)
- குவிக்க டயல் பேட் (Quick Dial Pad for calling)
- மெட்டல் கேசிங் (Metal casing)
- பில்ட் இன் பாரோமீட்டர் (Built-in Barometer)
- ஆல்ட்மீட்டர் (Altimeter)
- காம்பஸ் சென்சார் (Compass sensors)
- 100+ ஸ்போர்ட்ஸ் மோட் (sports mode)
- ஹார்ட் ரேட் (Heart rate)
- SpO2,
- ஸ்டேப் கவுண்டர் (Step counter)
- கலோரி கவுண்டர் (calorie counter)
- ஸ்லீப் கவுண்டர் (Sleep counter)
- கல்ட்ஸ்போர்ட் வாட்ஸ் ஆப் இணக்கம் (Cultsport Watch App)
- ஸ்ட்ராவா (Strava), கூகுள் ஃபிட் (Google Fit)
- ஆப்பிள் ஹெல்த் ஆப்ஸ் (Apple Health apps)
- 300mAh பேட்டரி (battery)
புதிய கல்ட்ஸ்போர்ட் போர்ஜ் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பிளாக், க்ரீன், நியான் கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் ரூ.2499 என்ற விலையுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மே 28, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமேசான் மூலம் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் அறிமுகம் சலுகையாக ரூ.200 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








