ஆளுக்கு 1 வாங்குவீங்க.. கம்மி பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. 8 நாள் பேட்டரி.. எந்த மாடல்?
கல்ட்.ஸ்போர்ட் (Cult.sport) நிறுவனம் இந்தியாவில் கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 (Cult sport Ranger XR1) எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு, 8 நாள் பேட்டரி பேக்கப் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.
கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 அம்சங்கள் (Cult sport Ranger XR1 Specification): 1.43-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த அசத்தலான கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) கொண்ட மாடலாகும்.

குறிப்பாக 466 x 466 பிக்சலஸ் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் டிஸ்பிளே. பின்பு இதில் 200+ வாட்ச் பேஸ்கள் வருகின்றன. குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிலட்-இன் பிளாஷ்லைட் (Built-in Flashlight) ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட்போனை அடிக்கடி எடுக்க தேவை இருக்காது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கல்ட்ஸ்போர்ட் வாட்ச் ஆப் (Cultsport Watch App) மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
பின்பு ஹார்ட் ரேட் மானிட்டர் ( Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), கலோரி மானிட்டர் (Calorie Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) ஆகியவை கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட் வாட்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
இந்த கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட் வாட்ச் மாடலில் 100க்கும் மேற்பட்ட ஸ்போட்ர் மோட்கள் (Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. லைவ் கிரிக்கெட் ஸ்கோர்கள், பிஎம்ஐ கால்குலேட்டர் (BMI Calculator), கால்குலேட்டர் மியூசிக் கன்ட்ரோல் (Music Control), சோஷியல் மீடியோ கியூஆர் கோட் சப்போர்ட் (Social Media QR Code Support), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 மாடலில் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளாக் (Black), கிரே (Gray), ரெட் (Red) நிறங்களில் இந்த அசத்தலான கல்ட்.ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரி வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 வாட்ச்சில் 300mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 8 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் பயன்படுத்தினால் சில நாட்களுக்கு மட்டுமே பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,499 விலையில் இந்த அசத்தலான கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட் வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமேசான் (Amazon) தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும். குறிப்பாக கல்ட்.ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர்1 ஸ்மார்ட் வாட்ச் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








