ஒரே போடு.. லம்பா ரூ.7,000 தள்ளுபடி.. ரூ.2,999 விலைக்கு வந்த பிரீமியம் வாட்ச்.. ரக்கட் மாடல் வேற!
கல்ட்ஸ்போர்ட் (Cultsport) நிறுவனத்தின் கல்ட்ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் (Cult Sport Ranger XR) ஸ்மார்ட்வாட்ச் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், 5 ஹெல்த் மானிட்டர், 420mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், ரக்கட் டிசைனிலும் பட்டையை கிளப்புகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் ரூ.9,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தும், அமேசானில் அறிமுக சலுகையாக 70 சதவீத ஆஃபரில் பாதிக்குப்பாதி விலையை விட கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச் எப்போது விற்பனைக்கு கிடைக்கும்? முழு அம்சங்கள் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட தகவல்கள் பின்வருமாறு.

கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் அம்சங்கள் (Cult Sport Ranger XR Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) கொண்ட மாடலாகும். இதில் 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதனால் அவுட்டோரிலும் கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும்.
இதில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது. இந்த வாட்ச் ஸ்மார்ட்போனுடன் நொடியில் கனெக்ட் செய்ய ஏதுவாக ஒன் - டேப் பேரிங் (One - Tap Pairing) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 70+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) மற்றும் 200+ வாட்ச் பேஸ்கள் வருகின்றன.
சைக்கிளிங் (Cycling), ரன்னிங் (Running), வாக்கிங் (Walking) போன்றவற்றை நீங்கள் செய்யும்போது, தானாகவே அவற்றை கணக்கிட தொடங்கும் வகையில், ஆட்டோமேடிக் ஸ்போர்ட்ஸ் ரிகனைசேஷன் (Automatic Sports Recognition) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச்சில் மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.
அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் ( Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்டெப் மானிட்டர் (Step Monitor), கலோரி மானிட்டர் (Calorie Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை கல்ட்ஸ்போர்ட் வாட்ச் ஆப் (Cultsport Watch App) மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
மேலும், டிஜிட்டல் கால்குலேட்டர் (Digital Calculator), பிஎம்ஐ கால்குலேட்டர் (BMI Calculator), சோஷியல் மீடியோ கியூஆர் கோட் சப்போர்ட் (Social Media QR Code Support), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
இந்த கல்ட்ஸ்போர்ட்ஸ் வாட்ச்சில் 420mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் பயன்படுத்தினால் 3 நாட்களுக்கு பேக்கப் வரும். ஃபுல் சார்ஜ் செய்ய 120 நிமிடங்கள் பிடிக்கும்.
இந்த கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச், ரக்கட் டிசைனுடன் ப்ளூ (Blue), பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் வைட் (White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அறிமுக சலுகையாக வெறும் ரூ.2,999க்கு விற்பனைக்கு வருகிறது. வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் 12 மணியில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.
அமேசான் (Amazon) மற்றும் கல்ட்ஸ்போர்ட்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும், முதலில் ஆர்டர் செய்யும் 600 வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்துக்கான கல்ட்பாஸ் எலைட் மெம்பர்ஷிப் (CultPass Elite Membership) கிடைக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 600 கல்ட்ஸ்போர்ட்ஸ் பிட்னஸ் சென்டர்களில் சில வொர்க்அவுட்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








