Home
Gadgets

தெறிக்குது ஆர்டர்.. வெறும் ரூ.2499க்கு AMOLED டிஸ்பிளே.. LIVE கிரிக்கெட் ஸ்கோர்.. 7 நாள் பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, லைவ் கிரிக்கெட் ஸ்கோர் பீச்சர், 7 நாட்கள் பேட்டரி பேக்கப், ஹெல்த் மானிட்டர்கள், போன்ற பக்கா அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கல்ட் ஸ்போர்ட் பர்ன் பிளஸ் (CULT SPORT Burn Plus) ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையில் கம்மி விலைக்கு கிடைக்கிறது.

கல்ட் ஸ்போர்ட் பர்ன் பிளஸ் அம்சங்கள் (CULT SPORT Burn Plus Specification): இந்த கல்ட் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் 1.78- இன்ச் (368×448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆகவே, இந்த டிஸ்பிளே கிரிஸ்டல் கிளியர் விசுவல் அனுபவத்தை கொடுக்கும்.

ரூ.2499க்கு AMOLED டிஸ்பிளே.. LIVE கிரிக்கெட் ஸ்கோர்.. எந்த மாடல்?

இந்த வாட்ச்சில் கிரிக்படி (CricBuddy) என்னும் பிரத்யேக பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் லைவ் ஸ்கோர் (Live Score) மற்றும் மேட்ச் நோட்டிபிகேஷன்களை (Match Notifications) தெரிந்து கொள்ள முடியும். கிரிக்கெட் பிரியர்களிடையே இந்த பீச்சர் மிகுந்த ஆர்வத்தை தூண்டக் கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த கல்ட் ஸ்போர்ட் பர்ன் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி, குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது. அதோடு மொபைல் (Mobile), லேப்டாப் (Laptop), டேப்லெட் (Tablet) போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்வதற்காக ஒன் டேப் பேரிங் (One Tap Pairing) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கால்குலேட்டர் (Calculator), குயிக் ரிப்ளே (Quick Reply), அலாரம் (Alarm), டைமர் (Timer) போன்ற ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன,

இந்த கல்ட் ஸ்போர்ட் பர்ன் பிளஸ் வாட்ச்சில் 115க்கும் மேற்பட்ட ஸ்போட்ர் மோட்கள் (Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஜாக்கிங் (ரogging), ரன்னிங் (Running), ஸ்விம்மிங் (Swimming), வாக்கிங் (Walking) மற்றும் டான்சிங் (Dancing) போன்ற முக்கிய மோட்களும் வருகின்றன. இந்த டேட்டாவை கல்ட்.ஸ்போர்ட் ஆப் (cult.sport app) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இந்த கல்ட் ஸ்போர்ட் பர்ன் பிளஸ் வாட்ச்சில் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) மற்றும் டிராக்கர்கள் (Trackers) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்டெப்ஸ் மற்றும் கலோரி டிராக்கிங் (Steps & Calorie Tracking), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ரியல் எஸ்பிஓ2 மானிட்டர் (Reak Spo2 Monitor) மற்றும் ஃபீமேல் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Female Menstrual Cycle Tracking) ஆகியவை வருகின்றன.

இந்த வாட்ச் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, வெறும் 1.5 மணி நேரம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 7 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அதுவே ப்ளூடூத் காலிங் மோடில் பயன்படுத்தினால் 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக் கூடியது. கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களுக்காக இன்ஸ்டன்ட் நோட்டிபிகேஷன் (Instant Notifications) பீச்சர் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.2499க்கு AMOLED டிஸ்பிளே.. LIVE கிரிக்கெட் ஸ்கோர்.. எந்த மாடல்?

இந்த பர்ன் பிளஸ் மாடலில் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது. மேலும், டிஎன்டி (DND), ஃபைண்ட் வாட்ச் (Find Watch), ஃபைண்ட் போன் (Find Phone) மற்றும் ரைஸ் டூ வேக் (Raise to Wake) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச்சுக்கு 12 மாதங்கள் வாரண்டி வழங்கப்படுகிறது. அதோடு 3 மாதங்களுக்கான கல்ட்பாஸ் சப்ஸ்கிரிப்ஷன் (Cultpass Subscription) வழங்கப்படுகிறது.

இந்த வாட்ச்சில் சிலிகான் மற்றும் மெட்டல் ஸ்டிராப் மாடல்கள் வருகின்றன. ஆகவே, சிலிகான் மாடலின் விலை ரூ.2,999ஆகவும், மெட்டல் மாடலின் விலை ரூ.3,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக சிலிகான் மாடல் ரூ.2,499க்கும் மெட்டல் மாடல் ரூ.2,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
CULT SPORT Burn Plus With AMOLED Display, Silicon Strap Launched in India Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X