ஆர்டர் அள்ளுமே.. வெறும் ரூ.2,499 போதும்.. 7 நாள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
கல்ட்.ஸ்போர்ட் (Cult.sport) நிறுவனம் இந்தியாவில் புதிய கல்ட் ஸ்பிரிட் (Cult Spirit) ஸ்மார்ட்வாட்ச் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்காக இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் (Cult Spirit Specification): 1.43-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. மேலும் இதில் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Face) வருகின்றன. அதேபோல் IP68 தர வாட்டர்-ரெசிஸ்டன்ட் (water-resistant) கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

டயல் பேட் (Dial Pad) மூலம் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டிருக்கிறது கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த வாட்சிலிருந்து நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எல்1 பேண்ட் ஜிபிஎஸ் (L1 band GPS)வசதி இதில் உள்ளது. எனவே ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) வருகிறது. இதுதவிர 100க்கும் அதிகமான ஸ்போட்ர் மோட்கள் (Sports Modes) கொண்டுள்ளது கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச்.
குறிப்பாக VO2 மேக்ஸ் மானிட்டர் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ஆகவே ஸ்டெப்ஸ் கவுண்ட்டர், கலோரி கண்காணிப்பு போன்ற பல விஷயங்களை இதில் தெரிந்துகொள்ள முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் உடற்பயிற்சிக்குத் தகுந்த அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது.
ஜிங்க் அலாய் (Zing alloy) கேஸ், ரோடேட்டிங் கிரவுண் (Rotating Crown), ஃபங்ஷன் பட்டன், வட்ட வடிவ டயல் போன்ற ஆதரவுகளுடன் கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச்.

கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 300எம்ஏஎச் பேட்டரி (300mAh battery) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் Cultsport Watch ஆப் வசதியுடன் இந்த கல்ட் ஸ்பிரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இணைத்துப் பயன்படுத்த முடியும். இதுதவிர ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட், Strava போன்ற பிரபலமான உடற்பயிற்சி தளங்களுடன் இணக்கமானது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
பிளாக் (Black), ஸ்போர்ட்டி கிரீன் (Sporty Green), கிரே (Grey), நியான் கிரீன் (Neon Green) மற்றும் பிளாக் ஃபேப்ரிக் (Black Fabric) நிறங்களில் இந்த வாங்க கிடைக்கும். மேலும் இதன் விலை ரூ.2,499-ஆக உள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி இதன் விற்பனை தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








