Home
Gadgets

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1,999 பட்ஜெட்ல AMOLEDடிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. ப்ளூடூத் காலிங்.. எந்த வாட்ச்?

அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டரிங், 300mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட கல்ட் ஏஸ் எக்ஸ்1 (Cult Ace X1) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை, விற்பனை விவரங்கள் இதோ.

கல்ட் ஏஸ் எக்ஸ்1 அம்சங்கள் (Cult Ace X1 Specifications): இந்த கல்ட் வேரியண்ட்டில் 2.04 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

பட்ஜெட்ல AMOLEDடிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. ப்ளூடூத் காலிங் வாட்ச்!

இந்த வாட்ச் கர்வ் எட்ஜ் டிஸ்பிளே டிசைனில் ரெக்டாங்கிள் வாட்ச் டயல் (Rectangle Watch Dial) கொண்டிருக்கிறது. அதோடு ஃபங்ஸ்னல் கிரவுண் (Functional Crown) வருகிறது. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் கான்டாக்ட்ஸ் சேவிங் சப்போர்ட் (Contact Saving Support) வருகிறது. கல்ட் ஏஸ் எக்ஸ்1 மாடலில் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) வருகின்றன. அதேபோல ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் உள்ளிட்ட 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Mode) வருகின்றன.

இந்த கல்ட் வேரியண்ட்டில் ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) இருக்கின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர் (Spo2 Monitor) ஆகியவை வருகின்றன.

அதேபோல ஃபீமேல் ஹெல்த் டிராக்கர் (Female Health Tracker) மற்றும் ஸ்டெப்ஸ் & கலோரி டிராக்கிங் (Steps & Calorie Tracking) சப்போர்ட் வருகின்றன. இந்த கல்ட் மாடலில் பக்காவான பேட்டரி சிஸ்டம் வருகிறது. 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும் 300mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பேக்கப் பற்றிய கவலையே இருக்காது.

இந்த கல்ட் ஏஸ் எக்ஸ்1 வேரியண்ட்டில் லைவ் கிரிகெட் ஸ்கோர் (Live Cricket Score), ஆப் (App), கால் (Call) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்றவற்றுக்கு ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் வருகிறது. அதேபோல வெதர் அப்டேட் (Weather Update), டிரிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) பீச்சர்கள் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், பிஎம்ஐ கால்குலேட்டர் (BMI Calculator), இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games), கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Camera & Music Control) போன்ற பல்வேறு அம்சங்கள் வருகின்றன. இந்த வாட்ச்சானது, சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metallic Strap) ஆகிய 2 வேரியண்ட்களில் வருகிறது.

இதில் சிலிகான் வேரியண்ட்டில் சார்கோல் கிரே (Charcoal Grey), பிளாக் (Black), கன் மெட்டல் கிரே (Gun Metal Grey) ஆகிய 3 கலர்கள் இருக்கின்றன. அதேபோல மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் கிரீன் (Green) மற்றும் ஆரஞ்சு (Orange) ஆகிய கலர்கள் வருகின்றன.

இந்த கல்ட் ஏஸ் எக்ஸ்1 வேரியண்ட்டில் விலை ரூ.1999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவெறும் அறிமுக சலுகையென்பதால், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாடலை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல கல்ட் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Cult Ace X1 With AMOLED Display, 300mAh Battery Sale From January 31 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X