யார்ரா நீங்கலாம்.. 10000mAh பேட்டரி உடன் கையடக்க குட்டி ஃபேன்.. 33W பவர் பேங்க் ஆகவும் வேலை செய்யும்!
போர்ட்டபிள் ஃபேன்ஸ் (Portable Fans) என்கிற கையடக்க மின்விசிறிகள் எல்லாமே பொதுவாக எளிமையான மற்றும் ஒரே ஒரு பயன்பாட்டிற்கான (காற்று வீசும் பயன்பாட்டிற்கான) கருவிகளாக மட்டுமே இருக்கும். ஆனால் குக்டெக் (Cuktech) என்கிற நிறுவனம் போர்ட்டபிள் ஃபேனை இன்னும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு டிவைஸ் ஆக மாற்றியுள்ளது
இந்நிறுவனம் சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் (CP Modular Fan Plus) என்ற புதிய போர்ட்டபிள் கூலிங் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இது மாடுலர் தன்மையை (Modularity) பெரிதும் சார்ந்திருப்பதுடன், பாஸ்ட் சார்ஜ் செய்யும் பவர் பேங்க் (Fast-charging power bank) ஆகவும் செயல்படுகிறது.

குக்டெக் சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் டிவைஸின் விரிவான அம்சங்கள்: சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் ஆனது குக்டெக் நிறுவனத்தின் பிரத்யேக பவர்-பின் மேக்நட் இன்டர்பேஸால் (Power-Pin magnetic interface) இயக்கப்படும் ஒரு மாடுலர் டிசைனை கொண்டு உள்ளது. இந்த சிஸ்டம், எக்ஸ்டர்னல் பவர் மாட்யூல்கள் மற்றும் எக்ஸ்டென்சன் கேபிள்கள் போன்ற ஆக்சஸெரீஸ்களை இணைக்க அனுமதிக்கிறது.
மேக்நட் கனெக்ஷன் ஆனது 15என் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது அன்றாட பயன்பாட்டிற்கு பாதுகாப்பான மற்றும் நிலையான பொருத்தத்தை உறுதி செய்கிறது. குக்டெக் நிறுவனம் இந்த டிவைஸிற்கு கையடக்க வடிவத்தோடு சேர்த்து ஒரு லேனியர்டையும் சேர்த்துள்ளது. இது பயணத்தின்போது எடுத்து செல்லவும், பயன்படுத்தவும் எளிதாக்குகிறது.
இந்த மின்விசிறி அதிவேக மூன்று-கட்ட பிரஷ்லெஸ் மோட்டாரில் இயங்குகிறது. இது வினாடிக்கு 11 மீட்டர் வரை காற்று வேகத்தை வழங்குகிறது மற்றும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட சுழல் காற்று ஓட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காற்று வெளியீட்டை 40% வரை அதிகரிக்கும் திறனையும் கொண்டுள்ளது
இதன் புதிய மோட்டார் அதன் முந்தைய மாடலை விட பெரிய விட்டத்தை கொண்டுள்ளது, இது காற்றோட்டத்தை மேம்படுத்துவதோடு, ஆற்றல் நுகர்வையும் 75% வரை குறைக்கிறது. இந்த மின்விசிறி, அதிகபட்ச குளிரூட்டும் செயல்திறனுக்காக, சரிசெய்யக்கூடிய மூன்று வேக நிலைகளையும், ஒரு பூஸ்ட் மோடையும் வழங்குகிறது.
குக்டெக் நிறுவனம் இந்த மின்விசிறியில் நைன்-பிளேடு டர்பைன் அமைப்பை பொருத்தியுள்ளது. இது அடர்த்தியான காற்றோட்ட வெட்டுதலை ஆதரித்து, காற்றை ஒரு பெரிய பரப்பளவில் விநியோகிக்கிறது. சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் 65,516 மிமீ² வரை பரப்பளவை உள்ளடக்குகிறது மற்றும் சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்க மேம்பட்ட ஒலி சீரமைப்புடன் இயங்குகிறது.
இது குறைந்தபட்ச வேகத்தில் 50dB, நடுத்தர வேகத்தில் 62dB, மற்றும் அதிகபட்ச வேகத்தில் 66dB சத்தத்தை உருவாக்குகிறது. இந்த மின்விசிறியில் உள்ளமைக்கப்பட்ட இரண்டு 5,000mAh பேட்டரிகளும் உள்ளன, இதன் விளைவாக இத மொத்த பேட்டரி திறன் 10,000mAh ஆகிறது. இது குறைந்தபட்ச வேகத்தில் 37 மணிநேரம் வரையிலும், நடுத்தர வேகத்தில் 24 மணிநேரம் வரையிலும், மற்றும் அதிகபட்ச வேகத்தில் 4 மணிநேரம் வரையிலும் பயன்பாட்டை வழங்குகிறது.
மேலும் இந்த மின்விசிறி 33W அவுட்புட் மற்றும் 27W இன்புட் ஆதரவு கொண்ட ஒரு பவர் பேங்காகவும் செயல்படுகிறது. இது PD, PPS, மற்றும் MiPPS போன்ற பாஸ்ட் சார்ஜிங் நெறிமுறைகளை ஆதரிக்கிறது. அதாவது இது பல டிவைஸ்களை திறமையாக சார்ஜ் செய்யும்.
சுவாரசியமாக சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் ஆனது, சார்ஜ் ஆகும்போதே பயனர்கள் மின்விசிறியை இயக்க அனுமதிக்கும் பாஸ்-த்ரூ சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இதில் மிகை மின்னோட்ட பாதுகாப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் ஷார்ட்-சர்க்யூட் பாதுகாப்பு போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
இந்த மின்விசிறியில், அதன் நிலையை விரைவாக தெரிந்துகொள்ள எல்இடி லைட்களுடன் கூடிய பேட்டரி இண்டிகேட்டர் சிஸ்டமும் உள்ளது. இதன் "அட்டகாசமான"அம்சங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, நிறுவனமானது சிபி மாடுலர் ஃபேன் பிளஸ் போர்ட்டபிள் கூலிங் டிவைஸின் விலை, விற்பனை மற்றும் கிடைக்கும்தன்மை (இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா) என எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications