பட்ஜெட்ல அலறவிட்ட Crossbeats.. 60 மணிநேர பிளேடைம்.. 13mm கிராபைன் டிரைவர் இயர்பட்ஸ்.. என்ன விலை?
கிராஸ்பீட்ஸ் (Crossbeats) பிராண்ட் இந்திய சந்தையில் புதிதாக கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் (Crossbeats Sonic 3 earbuds) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் நான்ஸ்டாப் 60 மணிநேர பிளேபேக் (60 hours playback time) நேரத்தை வழங்குகிறது.
இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் 60 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்கும் சக்தி வாய்ந்த இயர்பட்ஸ் சாதனமாக இந்த புதிய கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் (Crossbeats Sonic 3 earbuds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டைலிஷான டிசைன், கிரிஸ்டல் க்ளியர் ஆடியோ, பவர்புள் பேட்டரி ஆயுள் என்று தாறுமாறான அம்சங்களை இந்த கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் பேக் செய்துள்ளது. இது பற்றிய முழுவிபரம் இதோ.

கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் (Crossbeats Sonic 3 earbuds):
இந்த புதிய கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் சாதனம் 13mm கிராபைன் டிரைவர்ஸ் (13mm graphene drivers) உடன் குவாட் மைக் எம்இஎம் சென்சிங் தொழில்நுட்பத்துடன் (Quad Mic MEMSensing technology) வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) அம்சத்துடன் மேம்பட்ட வாய்ஸ் கால் அனுபவத்தை மிகவும் துல்லியமானதாக வழங்கி அசத்துகிறது.
இந்த கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் (Crossbeats Sonic 3 earbuds) சாதனத்தை முக்கியமான சிறப்பம்சமே இதன் பேட்டரி லைஃப் (Battery life) தான் மக்களே. காரணம் இந்த இயர்பட்ஸ் சாதனம் 60 மணிநேர மொத்த பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தை 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 100 நிமிட பிளேபேக் நேரம் கிடைக்கிறது.
இந்த கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் டிவைஸ் 30db ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (30db hybrid Active Noise Cancellation - ANC) அம்சத்தையும் கொண்டுள்ளது. அதேபோல், இதில் கேமர்களுக்கான 40ms லோ-லேடன்சி மோட் (40ms low latency mode) அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆடியோ மற்றும் வீடியோ இடையிலான சிங்க்-ஐ மிகவும் துல்லியமாக வழங்குகிறது.

கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் விலை (Crossbeats Sonic 3 earbuds Price):
இந்த இயர்பட்ஸ் சாதனம் IPX5 ரேட்டிங் உடன் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி (Bluetooth v5.3 connectivity) இணைப்பை வழங்குகிறது. இது AAC/SBC codecs அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த புதிய கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ. 1999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கிராஸ்பீட்ஸ் சோனிக் 3 இயர்பட்ஸ் சாதனம் அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் கிராஸ்பீட்ஸ் வலைப்பக்கம் (Crossbeats website) வழியாக வாங்க கிடைக்கிறது. இது பிளாக் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை வாங்க கிடைக்கிறது. நீங்கள் ஒரு நீண்ட நேர பிளேபேக்-டைம் உடன் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் சேர்த்து வழங்கும் ஒரு பட்ஜெட் இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க நினைத்தால் உங்கள் தேர்வு இதுவாக தான் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








