Home
Gadgets

புரட்டிப்போடும் ஸ்மார்ட்வாட்ச்.. ChatGPT சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகராக அமேலெட் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், சாட்ஜிபிடி சப்போர்ட், டைனாமிக் ஐலேண்ட், ஈ-புக் ரீடர் மற்றும் ப்ளூடூத் காலிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் (Crossbeats Nexus) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் முழு இதோ.

இந்தியாவில் முதல் சாட்ஜிபிடி (ChatGPT) சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் தட்டி சென்றுள்ளது. இந்த அம்சம் மட்டுமல்லாமல், ஐபோன்களின் வரும் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) போன்ற புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை வியப்பில் மூழ்கடித்துள்ளது. இந்த வாட்ச்சின் முழு அம்சங்களை முதலில் பார்ப்போம்.

ChatGPT சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் அம்சங்கள் (Crossbeats Nexus Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 2.1 இன்ச் (320 x 384 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. அதோடு காலிங், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ள டைனாமிக் ஐலேண்ட் பீச்சர் கொண்டுள்ளது.

இந்த கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் வருகிறது. அதோடு டயல் பேட் (Dial pad) கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஐஓஎஸ் 10 (iOS 10) மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 (Android 5.1) ஓஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ்கள் கொண்ட போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த வாட்ச்சில் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) மற்றும் 500+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Face) வருகின்றன. இந்த கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் மாடலில் முக்கிய ஸ்மார்ட் பீச்சர்களாக ஜிபிஎஸ் டைனாமிக் ரூட் டிராக்கிங் (GPS Dynamic Route Tracking), டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) மற்றும் ஈ-புக் ரீடர் (Ebook Reader) ஆகியவை வருகின்றன.

ChatGPT சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ரியல்டெக் (REALTEK) ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிரி (Siri) மற்றும் ஓகே கூகுள் (OK Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சாட்ஜிபிடியையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு இன்டர்நெட் கனெக்டிவிட்டி தேவைப்படும். இந்த வாட்ச்சின் ஹெல்த் பீச்சர்களை பொறுத்தவரை, ஹார்ட் ரேட் (Heart Rate), எஸ்பிஓ2 (SpO2) மானிட்டர்கள் வருகின்றன.

அதேபோல பிளட் பிரசர் (Blood Pressure), ஸ்லீபிங் மானிட்டர் (Sleep Monitor) மற்றும் பெடோமீட்டர் (Pedometer) ஆகியவை கொண்டுள்ளது. அதோடு ஃபீமேல் ஹெல்த் டிராக்கிங் (Female Health Tracking) சப்போர்ட் வருகிறது. இந்த டேட்டாக்களை மேக்டிவ் ப்ரோ (Mactive Pro) ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

மேலும், ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm), செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder), கால்குலேட்டர் (Calculator), வெதர் அப்டேட் (Weather Update), ஃபைண்ட் மை போன் (Find My Phone), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஸ்பில்ட் ஸ்கிரீன் (Split Screen) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் (Fastest Wireless Charging) வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 250 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. அதோடு ஸ்டாண்ட்பை மோடில் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இந்த வாட்ச்சிக்கு ப்ரீ ஹார்ட் கேஸ் (Free Hard Case) கொடுக்கப்படுகிறது.

ChatGPT சப்போர்ட்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த கிராஸ்பீட்ஸ் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.5,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடியில் ரூ.4,999க்கு கிடைக்கிறது. இந்த வாட்ச்சை சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) கலரில் வாங்கி கொள்ளலாம். கிராஸ்பீட்ஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Crossbeats Nexus With ChatGPT, Wireless Charging AMOLED Display Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X