Home
Gadgets

அள்ளி அள்ளி கொடுக்கும் அமேசான்.. 300 இன்ச்.. டால்பி அடியோ.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடட் சேல் (Amazon Great Indian Festival Reloaded Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி (Crossbeats Lumex Vista Projector 4K Ultra HD)மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளி அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Crossbeats Lumex Vista Specifications): நேட்டிவ் 1080p (Native 1080P) சப்போர்ட் மற்றும் 4K சப்போர்ட் உடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. குறிப்பாக இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

1200 ஏஎன்எஸ்ஐ (ANSI) பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+)உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் மாடலில் 99 சதவீத கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 1080p மற்றும் 4K கன்டென்ட்களை கிளாரிட்டியாக பார்க்க முடியும். கேமிங், மூவி மற்றும் அவுட்டோர்களுக்கு ஏற்ப இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Andriod TV OS) மூலம் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் இயங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆதரவும் இதில் உள்ளது. அதுவும் 1000+ ஆப்கள் மற்றும் 800+ டிவி சேனல்களின் சப்போர்ட் கொடுக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாகவே இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கின்றன.

தரமான டால்பி ஆடியோ மற்றும் டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) உடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

என்ஹான்ஸ்டு எலக்ட்ரிக் ஆட்டோ போகஸ் (Enhanced Electric Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட், டிஜிட்டல் ஜூம் ஃபங்ஷன் (Digital Zoom Function) உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இந்த சாதனம் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுக்கிறது. எனவே பெரிய ஸ்மார்ட் டிவிகள் வாங்க அவசியம் இருக்காது.

அள்ளி அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் மாடலில் ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் மட்டுமல்லாமல், ஐஓஎஸ் டிவைஸ்களையும் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். மல்டி டிவைஸ் காஸ்டிங் (Multi Device Casting) சப்போர்ட், கிட்ஸ் மோட் ஃபில்டர் (Kids Mode Filter) போன்ற வசதிகளும் இந்த சாதனத்தில் உள்ளன.

எல்டிசி ஆப்டிகல் என்ஜின் (LCD Optical Engine) ஆதரவுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யூஎஸ்பி போர்ட் (USB), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மாடலில் உள்ளன. இதுதவிர 1 வருட வாரண்டியுடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் விஸ்டா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Crossbeats LumeX Vista Projector Gets Discount on Amazon Great Indian Festival Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X