செம ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் 4கே அல்ட்ரா எச்டி சப்போர்ட் கொண்ட கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் (Crossbeats Lumex Cine Smart Home Projector) மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Crossbeats Lumex Cine Smart Home Projector Specifications): 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) மற்றும் நேட்டிவ் 1080p பிக்சல்ஸ் ஆதரவுடன் வெளியாகி உள்ளது இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் எச்டிஆர் 10, எஸ்டிஆர் போன்ற அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன.
20000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (Contrast Ratio), 16000 லுமன்ஸ் (16000 lumens) பிரைட்னஸ் ஆதரவுடன் இந்த 4கே ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. ஆர்ஜிபி லைட்னிங் (RGB Lighting) உடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் tri கலர் லேசர் டெக்னாலஜி இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஷார்ப் டிஸ்பிளே போன்ற தனித்துவமான அம்சங்களுடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் மாடல் வெளியானது. குறிப்பாக 10,000-க்கு மேற்பட்ட ஆப்களை இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும். அதுவும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற அனைத்து ஆப்களையும் இந்த சாதனம் மூலம் பயன்படுத்த முடியும்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது.

15W பில்ட் இன் ஸ்பீக்கர்கள் உடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மாடலில் உள்ளன.
மேலும் டிஜிட்டல் ஜூம் ஆதரவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் சினி ஸ்மார்ட் ஹோம் ப்ரொஜெக்டர் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications