Home
Gadgets

அள்ளி கொடுக்கும் அமேசான்.. கூகுள் டிவி ஓஎஸ்.. 300 இன்ச்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசானில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி (Crossbeats Lumex Aura Projector 4K Ultra HD) மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ், 300 இன்ச், ஆட்டோ போகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியானது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது அமேசானில் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

 அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Crossbeats Lumex Aura Projector Specifications): 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் ஆதரவுடன் இந்த புதிய கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 1000 ANSI பிரைட்னஸ் உடன் கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 4K ப்ரொஜெக்டர் LCD சினிமா-தர ஆப்டிகல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது. பின்பு இதில் எச்டிஆர் 10 பிளஸ் டைனமிக் ஆப்டிமைசேஷன் அம்சம் கூட உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற சப்போர்ட் இதில் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற அனைத்து ஆப்களையும் இந்த சாதனம் மூலம் பயன்படுத்த முடியும்.

இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது. மேலும் 180° சுழலும் ஸ்டாண்ட் உடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.

ஆட்டோ 4டி கீஸ்டோன் (Auto 4D Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) போன்ற வசதிகளும் இந்த மாடலில் உள்ளன. மேலும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிக அருமையாகப் பயன்படும்.

 அள்ளி கொடுக்கும் அமேசான்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

20W டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் 4கே அல்ட்ரா எச்டி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வைஃபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மாடலில் உள்ளன.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த ப்ரொஜெக்டர் உடன் வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த கிராஸ்பீட்ஸ் லுமெக்ஸ் ஆரா ப்ரொஜெக்டர் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Crossbeats Lumex Aura Projector 4K Ultra HD available at 60 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X