Home
Gadgets

சும்மா கிழி.. 3D ஆடியோ.. லோவ் லேட்டன்சி மோட்.. 380mAh பேட்டரி.. 55 ஹவர்ஸ் பிளேபேக்.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் நாய்ஸ் கேன்சலிங், லோவ் லேட்டன்சி மோட், டச் கன்ட்ரோல், 380mAh பேட்டரி, 55 மணி நேர பிளே பேக் டைம் போன்ற நம்ப முடியாத அம்சங்களுடன் கிராஸ்பீட்ஸ் நிறுவத்தின் கிராஸ்பீட்ஸ் க்ரூவ் பட்ஸ் (CrossBeats Groov Buds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிராஸ்பீட்ஸ் (CrossBeats) நிறுவனம், மலிவான விலையில் பட்டையை கிளப்பும் அம்சங்கள் உடன் ஸ்மார்ட்வாட்ச், வயர்லெஸ் இயர்பட்ஸ், ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் போன்றவற்றை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ரூ.5,000 மதிப்பிலான இயர்பட்ஸ்களில் கொடுக்கப்படும் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில், கிராஸ்பீட்ஸ் க்ரூவ் பட்ஸ் என்னும் புதிய இயர்பட்ஸை விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது.

3D ஆடியோ.. 55 ஹவர்ஸ் பிளேபேக்.. லோவ் லேட்டன்சி மோட்.. எந்த மாடல்?

இந்த இயர்பட்ஸ், லோவ் எனர்ஜி ப்ளூடூத் சப்போர்ட், ஏஏசி, 13 மிமீ டிரைவர்கள், வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் 3டி சரவுண்ட் ஆடியோ போன்ற ஒட்டுமொத்த பிளாக்ஷிப் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இப்போது, அறிமுக சலுகையாக ரூ.1,500 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முழு அம்சங்கள், விற்பனை விவரங்கள் பின்வருமாறு.

கிராஸ்பீட்ஸ் க்ரூவ் பட்ஸ் அம்சங்கள் (CrossBeats Groov Buds Specifications): இந்த இயர்பட்ஸில் 13 மிமீ கிராபெனின் டிரைவர்கள் (Graphene Drivers) கொடுக்கப்பட்டுள்ளன. இது இன்-இயர் இயர்பட்ஸ் (In-ear Earbuds) டிசைன் கொண்டிருக்கிறது. பேருந்து, கார், சாலை போன்ற எந்த இடங்களிலும் கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபத்தை கொடுக்க என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்ஷலிங் (Environmental Noise Cancelling) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

லோவ் எனர்ஜி சப்போர்ட் கொண்ட ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எச்எஸ்பி (HSP), எச்எப்பி (HFP), ஏ2டிபி (A2DP), ஏவிஆர்சிபி (AVRCP) போன்ற கோடெக்ஸ் (Codecs) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்துக்கென்று பிரத்யேக மியூசிக் அனுபவத்தை கொடுக்க கிளியர்காம் டெக் (ClearComm Tech), பில்ட்-இன் இக்குலைசர் (Built-in Equalizers)மற்றும் ஹைப்பர்பேஸ் (HyperBass) ஆகிய அம்சங்கள் வருகின்றன.

இந்த இயர்பட்ஸ் டச் கன்ட்ரோல் (Touch Controls) கொண்டுள்ளது. இதன் மூலம் வாய்ஸ்கால் கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் செய்துகொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் 4 சவுண்ட் மோட்கள் (Sound Modes) கொண்டுள்ளது. ஆகவே, ஏப்ட்எக்ஸ் அடாப்டபிள் (aptX Adaptable), 3டி சரவுண்ட் ஆடியோ (3D Surround Audio), கேம் (Game) மற்றும் மியூசிக் (Music) ஆகிய மோட்கள் வருகின்றன.

அதோடு கேமிங் பிரியர்களை கவரும் விதமாக 40 எம்எஸ் லோட் லேட்டன்சி (Low Latency) கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பட்களிலும் தலா 2 மைக் வருகிறது. இந்த கிராஸ்பீட்ஸ் க்ரூவ் பட்ஸின் சார்ஜிங் கேஸிஸ் 380mAh பேட்டரி இருக்கிறது. அதே போல ஒவ்வொரு பட்களிலும் தலா 43mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 55 மணி நேரம் பிளே டைம் கிடைக்கும். இதனை 60 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ளும் விதமாக ஸ்னாப்சார்ஜ் (SnapCharge) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் இருக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistants) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IPX5 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பட்ஸ்களும் தலா 4 கிராம் மட்டுமே எடை கொண்டுள்ளதால், காதுகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த கிராஸ்பீட்ஸ் க்ரூவ் பட்ஸ் பிளாக் (Black) கலரில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), மிந்த்ரா (Myntra) மற்றும் டாட்டா கிளிக் (Tata CLiQ) போன்ற முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸின் விலை ரூ.1,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CrossBeats Groov Buds with 55h Playback, 40ms Low Latency, Touch Controls Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X