எப்பா.. என்னா அடி.. 400W ஆடியோ.. அதும் ரூ.9000-க்கு.. 1 சவுண்ட்பார்.. 2 ஸ்பீக்கர்.. சப்வூப்பர்.. எந்த மாடல்?
வீடு இல்லங்க, தெருவே அதிரும்படி 400W ஆடியோ அவுட் கொண்ட கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 ஹோம் தியேட்டர் (Crossbeats Blaze B900 Home Theatre) அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலையில் 1 சவுண்ட் பார், 1 சப்வூப்பர் மற்றும் 2 சாட்டிலைட் ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. மல்டிபோர்ட் கனெக்டிவிட்டி, 5.1 சேனல் அவுட், மாஸ்டர் ரிமோட் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களையும் வாரி வழங்கி இருக்கிறது. இந்த கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 ஹோம் தியேட்டரின் முழு விவரங்களை இதோ.
ரூ.10000 பட்ஜெட்ல ஹோம் தியேட்டர் வாங்கலாம்னு முடிவெடுத்தா ஸ்பீக்கர்கள் மற்றும் சப்வூப்பர் மட்டுமே கிடைக்கும். ஆனால், கிராஸ்பீட்ஸ் நிறுவனம் கூடவே சவுண்ட்பாரை கொடுத்து ஆடியோ பிரியர்களை தட்டி தூக்கி இருக்கிறது. இதனால், அடிமட்ட விலையில் ஸ்பீக்கர்கள், சப்வூப்பர், சவுண்ட்பார் மற்றும் ரிமோட் என்று ஒட்டுமொத்தமாக ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஆனால், இப்போது வந்துள்ள கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 ஹோம் தியேட்டர் கூடவே 5.1 சேனல் மற்றும் 400W அவுட்புட் கொடுத்து மார்கெட்டை அதிர விட்டுள்ளது. டிஜிட்டல் சிக்னேச்சர் ப்ராஸசர் (Digital Signature Processor) கொண்டிருப்பதால், ஆடியோ மோட்கள் (Audio Modes), ஈகியூ மோட்கள் (EQ Modes) வருகின்றன. இப்போது முழு பீச்சர்களை பார்த்து விடுவோம்.
கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 அம்சங்கள் (Crossbeats Blaze B900 Specifications): இந்த கிராஸ்பீட்ஸ் மாடலில் 5.1 சேனல் செட்டப் செய்து கொள்ளலாம். ஆகவே, டீப் பேஸ் அவுட் கொண்ட 6.5 இன்ச் சப்வூப்பர் வருகிறது. ஹோம் தியேட்டர் மாடலென்பதால், கூடவே டூயல் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் (Dual Satellite Speakers) வருகின்றன. அதேபோல 3 அடியில் சவுண்ட்பார் வருகிறது.
இந்த ஆடியோ டிவைஸ்கள் மூலம் 400W ஆடியே அவுட் பெற்று கொள்ளலாம். மல்டிபிள் ஸ்பீக்கர்கள் வருவதால், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) அனுபவம் பக்காவாக இருக்கும். இந்த கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 மாடலில் டிஜிட்டல் சிக்னேச்சர் ப்ராஸசர் வருகிறது. ஆகவே, 2ஆம் ஜெனரேஷன் ஸ்பாஷியலி டியூன்ட் அகஸ்டிக் (Spatially Tuned Acoustic) ஆடியோ சப்போர்ட் உள்ளது.
மூன்று சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. மியூசிக் (Music), மூவிஸ் (Movies) மற்றும் நியூஸ் (News) ஆகியவை உள்ளன. 80dB நாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் 60dB சென்சிட்டிவிட்டி கிடைக்கும். ப்ளூடூத் வி5.3 (Bluetooth V5.3) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த கனெக்டிவிட்டி மூலம் 10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கிடைக்கும். ப்ளூடூத் மட்டுமல்லாம், மற்ற கனெக்டிவிட்டியும் உள்ளது.
ஆகவே, எச்டிஎம்ஐ (HDMI), ஏஆர்சி (ARC), ஏயுஎக்ஸ் (AUX) ஆப்டிகல் (Optical) மற்றும் யுஎஸ்பி (USB) சப்போர்ட் வருகிறது. இதுபோக ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) செய்து கொள்ளலாம். வால் மவுண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும் இந்த கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 மாடலின் விலை ரூ.8,999ஆக மட்டுமே இருக்கிறது.
இந்த விலை மிகவும் மலிவாகும். இந்த கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 ஹோம் தியேட்டர் மாடலை கிராஸ்பீட்ஸ்.காம் (Crossbeats.com) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய முன்னணி ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் விற்பனை தொடங்க இருக்கிறது. ஆகவே, டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர்கள் கிடைக்கலாம்.
ஹோம் தியேட்டர் பிரியர்கள் ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு சவுண்ட்பார் மட்டுமல்லாமல், ஹோம் தியேட்டர் செட்டப் வாங்க வேண்டுமானால், 1 சப்வூப்பர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்களுடன் கிடைக்கும் இந்த கிராஸ்பீட்ஸ் பிளேஸ் பி900 மாடலை தாராளமாக ஆப்ஷனில் எடுத்து கொள்ளுங்கள். இதேபோல ரூ.10000 பட்ஜெட்டில் பல மாடல் கிராஸ்பீட்ஸில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications