Home
Gadgets

சும்மா கிழி.. பட்ஜெட்ல ஹெட் டிராக்கிங்.. ஸ்பாஷியல் ஆடியோ.. டைட்டானியம் டிரைவர்கள்.. எந்த மாடல்?

மியூசிக் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான பட்ஜெட்டில் ஹெட் டிராக்கிங், ஸ்பாஷியல் ஆடியோ, டைட்டானியம் டிரைவர்கள், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், 100+ ஹவர்ஸ் பிளேபேக் டைம் மட்டுமல்லாமல், மல்டிஃபங்ஸ்னல் டச் கன்ட்ரோல், கேமிங் லோவ் லேட்டன்சி மோட், 600mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் (Crossbeats Arc Buds) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பிரீமியம் லுக் கொடுக்கும் கிராஸ்பீட்ஸ் இயர்பட்ஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் அம்சங்கள் (Crossbeats Arc Buds Specifications): இந்த கிராஸ்பீட்ஸ் மாடலானது, டால்பின் ஹூக்ஸ் (Dolphin Hooks) டிசைன் கொண்டிருக்கிறது. ஆகவே, காதுகளில் கம்போர்ட் மற்றும் ஸ்ட்ராங் ஃபிட் கொடுக்கும். இந்த பட்கள் 8 கிராமில் லைட் வெயிட் பாடி கொண்டிருக்கிறது. ட்ரூரெவெர்ப் டெக்னாலஜி (TruReverb Technology) வருகிறது.

சும்மா கிழி.. பட்ஜெட்ல ஹெட் டிராக்கிங்.. ஸ்பாஷியல் ஆடியோ மாடல்!

இந்த கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் மாடலில் 14.2 எம்எம் டைட்டானியம் டிரைவர்கள் (Titanium Drivers) வருகின்றன. ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. மேலும், ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எச்எஸ்பி (HSB), எச்எப்பி (HFB) போன்ற கோடெக் சப்போர்ட் வருகிறது. ஹெட் டிராக்கிங் (Head Tracking) வருகிறது. ஆகவே, 6-ஆக்சிஸ் கைரோ சென்சார் (6-axis Gyro sensor) உள்ளது.

இதுபோக ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஆடியோ குவாலிட்டி மற்றும் அனுபவம் பிரீமியமாக இருக்கும். ப்ளூடூத் காலிங், வால்யூம், பவர் போன்றவற்றுக்காக மல்டிஃபங்ஸ்னல் டச் கன்ட்ரோல்கள் (Multifunction Touch Controls) வருகின்றன. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்கு ஏஐ நாய்ஸ் கேன்சலேஷலிங் (AI Noise Cancelling) சப்போர்ட் வருகிறது.

இந்த சப்போர்ட் கொண்ட 4 மைக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல ஏஐ ஈஎன்சி (AI ENC) சப்போர்ட் வருகிறது. ஆகவே, அவுட்டோரிலும் பக்கா வாய்ஸ் அவுட்புட்டை எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி (Low Latency) சப்போர்ட் உடன் கேம் மோட் (Game Mode) வருகிறது. இந்த கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் மாடலில் டைப்-சி சார்ஜிங் வருகிறது.

அதேபோல சார்ஜிங் கேஸில் (Charging Case) எல்இடி சார்ஜிங் இன்டிகேட்டர் வருகிறது. இந்த மாடலை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 100+ மணி நேரங்களுக்கு பிளேபேக் பெறலாம். டூயல் கனெக்சன் சப்போர்ட் (Dual Connection Support), வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistants) மற்றும் 1 ஸ்டெப் பேரிங் (Pairing) சப்போர்ட் வருகிறது.

இந்த கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் மாடலில் IPX5 ரெசிஸ்டன்ட் வருகிறது. ஐஓஎஸ் (iOS), ஆண்ட்ராய்டு (Android) மற்றும் விண்டோஸ் (Windows) ஓஎஸ் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த மாடலுக்கு ஒரு வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த ஆர்க் பட்ஸ் மாடலில் பிளாக் (Black) மற்றும் ப்ளூ (Blue) கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.

இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த இந்த கிராஸ்பீட்ஸ் ஆர்க் பட்ஸ் மாடலின் விலை ரூ.2,999 ஆக மட்டுமே இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் கிராஸ்பீட்ஸ் (Crossbeats) தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஹூக் டிசைன் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Crossbeats Arc Buds With 600mAh Battery Spatial Audio Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X