Home
Gadgets

வெறும் ரூ .17,999 விலையில் குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் LED டிவிகள் விற்பனை.. எங்கே தெரியுமா?

இந்தியாவில் மிகப் பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில்லறை பொருட்களின் விற்பனையாளர்களில் ஒருவரான குரோமா நிறுவனம், புதிய ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த அமேசானுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய கூட்டாண்மை மூலம், இரு நிறுவனங்களும் பயனர்களின் டிவி பார்க்கும் அனுபவத்தை வேறு நிலைக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குரோமா ஸ்மார்ட் டிவி

குரோமா ஸ்மார்ட் டிவி

இந்தத் தொடரில் மொத்தம் ஐந்து ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் ரூ .17,999 என்று துவங்கி ஒவ்வொரு மாடலும் அதற்கான விலையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் எச்டி முதல் யுஎச்.டி 4K டிஸ்ப்ளே ஸ்மார்ட் டிவிகளை தேர்வு செய்யலாம். இந்த சீரிஸ் இன் கீழ் கிடைக்கும் அனைத்து மாடல்களும் அமேசானின் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம் இயக்கப்படுகின்றது.

குரோமா ஃபயர் டிவி பதிப்பு ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள்

குரோமா ஃபயர் டிவி பதிப்பு ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் LED டிவிகள் ஃபயர் டிவி மூலம் இயக்கப்படுகின்றது. இது பயனர்களுக்கு ZEE5, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் பல போன்ற 5,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை நொடியில் எளிமையாக டிவி மூலமே அணுக அனுமதிக்கிறது.

 டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன்

டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன்

ஸ்மார்ட் டிவிகள் ஃபயர் டிவியால் இயக்கப்படுவதால், இவை அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் ஆதரிக்கின்றது. இந்த ஸ்மார்ட் டிவிகளால், பயனர்கள் தங்கள் விருப்பப்படி OTT மற்றும் DTH உள்ளடக்கங்களுக்கு இடையில் தடையின்றி மாற முடியும். இந்தத் தொடரில் உள்ள அனைத்து ஸ்மார்ட் டிவிகளும் அதிவேக ஒலி மற்றும் அற்புதமான படத் தரத்தை வழங்க டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடலின் விலை

32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடலின் விலை

குரோமா ஃபயர் டிவி பதிப்பு ஸ்மார்ட் எல்.ஈ.டி டிவிகள் 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும். இப்போது குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் எல்இடி டிவிகளின் விலை பற்றி பார்க்கலாம், இந்த தொடரில் ஐந்து புதிய ஸ்மார்ட் டிவிகள் உள்ளது. அதில் முதலாவது 32 இன்ச் வேரியண்ட் எச்டி ரெசல்யூஷன் சப்போர்ட்டுடன் வெறும் ரூ. 17,999 செலவில் கிடைக்கிறது. இரண்டாவதாக 43 இன்ச் வேரியண்ட் மாடல் முழு எச்டி அம்சத்துடன் வெறும் ரூ. 29,999 விலையில் கிடைக்கிறது.

50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடலின் விலை

50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடலின் விலை

அதேபோல், 43 இன்ச் வேரியண்ட் மாடல் 4K டிவி வெறும் ரூ.34,999 செலவில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. அடுத்தபடியாக, யுஎச்.டி 4K ரெசல்யூஷனுடன் கூடிய 50 இன்ச் வேரியண்ட் மாடல் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ. 39,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல், யுஎச்.டி 4K ரெசல்யூஷனுடன் கூடிய 55 இன்ச் வேரியண்ட் மாடல் கொண்ட ஸ்மார்ட் டிவி வெறும் ரூ. 46,499 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

3 ஆண்டுகள் விரிவான உத்தரவாதம்

3 ஆண்டுகள் விரிவான உத்தரவாதம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் எல்.ஈ.டி டிவிகள் இன்று முதல் குரோமா மற்றும் அமேசான் இந்தியாவின் ஆஃப்லைன் / ஆன்லைன் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அனைத்து ஸ்மார்ட் டிவிகளும் ஒரு வருடம் மற்றும் 3 ஆண்டுகள் விரிவான உத்தரவாதத்துடன் ஜீரோ டாட் மாற்று உத்தரவாதத்துடன் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Croma Fire TV Edition Smart LED TVs Launched In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X