13-இன்ச் புது MacBook மீது ரூ.45000 தள்ளுபடி! மார்கெட்டை அலற விடும் Croma ஆபர்.. iPhone, iPad விலைகளும் சரிவு!
குரோமா நிறுவனம் தனது 'எவ்ரிதிங் ஆப்பிள்' விற்பனையின் (Croma Everything Apple Sale) இரண்டாம் கட்டத்தை அறிவித்துள்ளது. இதில் ஆப்பிள் தயாரிப்புகள் முழுவதுமான புதிய தள்ளுபடிகள் (New Discounts) மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் (Exchange Offers) அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே தொடங்கிவிட்ட இந்த விற்பனை மே 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விற்பனையின் கீழ் - ஆப்பிளின் ஐபோன் (Apple iPhone) மாடல்கள் மீது மட்டுமின்றி, மேக்புக் (MacBook), ஐபேட் (iPad), ஏர்பாட்ஸ் (AirPods) மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், இந்த விற்பனை காலத்தில் எச்டிஎப்சி டாடா நியூ கார்டு (HDFC Tata Neu cardholders) வைத்திருப்பவர்களுக்கு இஎம்ஐ (EMI) திட்டங்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் (Exchange Bonus) மற்றும் கூடுதல் சேமிப்புகளையும் (Additional savings) இகுரோமோ வழங்குகிறது.

இந்த சிறப்பு விற்பனையின் மிக முக்கியமான பெஸ்ட் டீல்களில் (Best deal) ஒன்று, ஆப்பிள் மேக்புக் ஏர் எம்5 (Apple MacBook Air M5) மாடலின் மீதான விலைகுறைப்பு ஆகும். இது இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் ரூ.74,619 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
ரூ.1,19,900 என்கிற எம்ஆர்பி விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 13-இன்ச் மேக்புக் ஏர் எம்5 மாடலை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விலையான ரூ.1,07,910-க்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் டாடா நியூ நன்மைகள் மூலம் வாடிக்கையாளர்கள் இதன் விலையை மேலும் குறைக்கலாம். குரோமாவின் கூற்றுப்படி, வாங்குபவர்கள் தங்கள் பழைய டிவைஸிற்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம்
அதனுடன் ரூ.10,000 வரை அடிஷனல் எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறலாம். ரூ.8,291 வரையிலான டாடா நியூ காயின்ஸ் பலன்களும் இதில் அடங்கும், இதனால் குறிப்புட்ட மேக்புக் மாடலின் விலையை ரூ.74,619 ஆக குறைக்க முடியும்.இந்த விற்பனையில் 13-இன்ச் மேக்புக் நியோ (13-inch MacBook Neo) மாடல் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. தகுதியான சலுகைகளை பயன்படுத்திய பிறகு இது ரூ.39,069 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
ஐபோன்கள் மீதான சலுகைகள் (iPhone Offers): குரோமாவின் எவ்ரிதிங் ஆப்பிள் விற்பனையில் ஐபோன்கள் மீதும் ஆபர்கள் கிடைக்கிறது. 256ஜிபி ஆப்பிள் ஐபோன் 17 (iPhone 17) அதன் எம்ஆர்பி ஆன ரூ.82,900-லிருந்து குறைந்து, ரூ.44,768 என்கிற தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலையில் ரூ.23,500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் பலன்கள், ரூ.8,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் டாடா நியூ காயின்ஸ் பலன்கள் ஆகியவை அடங்கும்.
இதேபோல குரோமா நிறுவனமானது, 128ஜிபி ஐபோன் 15 (iPhone 15) மாடலை ரூ.36,891 என்கிற தள்ளுபடி விலையிலும், 128ஜிபி ஐபோன் 16 (iPhone 16) மாடலை ரூ.40,041 என்கிற தள்ளுபடி விலையிலும், அந்தந்த மாடல்களுடன் ஒருங்கிணைந்த சலுகைகளுடன் வழங்குகிறது. இந்த விற்பனையில், தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளின் பட்டியல் இதோ:
ஆப்பிள் ஐபேட் 11த் ஜெனரேஷன் (Apple iPad 11th Gen)): விலை - ரூ.29,489 முதல்
ஆப்பிள் ஐபேட் ஏர் எம்4 (Apple iPad Air M4): விலை - ரூ.55,490 முதல்
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (Apple AirPods Pro 3): விலை - ரூ. 22,491 முதல்
ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (Apple AirPods 4): விலை - ரூ.10,791 முதல்
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 (Apple Watch SE 3): விலை - ரூ.23,388 முதல்


Click it and Unblock the Notifications