Home
Gadgets

சே.. நமக்கு இதுமாதிரி ப்ரெண்ட்ஸ் கிடைக்கலையே.! பொறாமையா இருக்கு.!

இன்னும் சொல்லப்போனால் நாம் நமக்கு தெரியாமலேயே நம்மைச் சுற்றியுள்ள மக்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம்.

யார் ஹீரோ.? சினிமாக்களில் வருவது போல பைக் சேஸிங் செய்து, அந்தரத்தில் பல்டி அடித்து சண்டை போட்டு, சின்ன பிள்ளைகளை அல்லது ஹீரோயினை காப்பாற்றறி, அவ்வப்போது மரத்தை சுற்றி டூயட் பாடும் நபர்கள் அல்ல.

சில ஆய்வுகளின் படி, யார் ஸ்மார்ட்டாக செயல்படுகிறாரோ, யார் வலுவான (பலமான அல்ல) நபராக திகழ்கிறாரோ, யார் நெகிழ்வான மற்றும் தன்னலமற்ற அக்கறை கொண்டவராக இருக்கிறாரோ, யார் நம்மை கவர்ந்திழுக்கும் நம்பகமான மற்றும் ஊக்கமளிக்கும் தன்மைகளை கொண்டுள்ளாரோ - அவர் தான் ஹீரோ.!

நம்மில் பல ஹீரோக்கள் உண்டு.!

நம்மில் பல ஹீரோக்கள் உண்டு.!

அப்படி பார்த்தல் நம்மில் பல ஹீரோக்கள் உண்டு அல்லவா.? இன்னும் சொல்லப்போனால் நாம் நமக்கு தெரியாமலேயே நம்மைச் சுற்றியுள்ள மக்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். சில நேரம் நெகிழ்ச்சியான முறையில், பல நேரம் மிகவும் நகைப்பான முறையில்.! அப்படியாக, நம்மை சிரிக்க வைத்துக்கொண்ட அட செம்மையா இருக்காங்களே என்று நம்மை சிந்திக்கவும் வைக்கும் சில ஸ்மார்ட் ஹீரோக்களை தான் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம்.

#01 டெஸ்க்டாப்பையே ஒரு விஆர் கிளாஸா மாத்தின பாரு.! நீதான் யா ரியல் ஜீனியஸ்.!

#01 டெஸ்க்டாப்பையே ஒரு விஆர் கிளாஸா மாத்தின பாரு.! நீதான் யா ரியல் ஜீனியஸ்.!

துணி காய போடுற ஹேங்கர்ல, லேப்டாப்பை அட்டாச் பண்ணி தொங்கவிட்ட நம்ம ஊரு பசங்கள முந்திட்டான் யா இவன்.! எந்த ஊரு காரனா இருப்பான்.? தம்பி உங்க திருமுகத்தை ஒரு முகமா திருப்புங்கோ.!

#02 ஊருக்குள்ளே இருக்குற எல்லா டாக்ஸி டிரைவரும் மோசமானவங்க இல்லப்பா.!

#02 ஊருக்குள்ளே இருக்குற எல்லா டாக்ஸி டிரைவரும் மோசமானவங்க இல்லப்பா.!

யார் சார் கடவுள்.? எவன் ஒருவன் சகமனிதனின் "உண்மையான" தேவையை புரிந்து கொள்கிறானோ அவன் தான் கடவுள். உபெர் டாக்சி ஒன்றில் தொங்கும் சார்ஜிங் பாயிண்ட்.!

#03 பாவம்.. பசி தாங்காத புள்ள போல.!

#03 பாவம்.. பசி தாங்காத புள்ள போல.!

வேலை முக்கியம் தான் ப்ரோ.. ஆனா சோறு ரொம்ப ரொம்ப முக்கியம் ப்ரோ என்று கூறி,, ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள வந்த வகுப்பில் அடுப்பை பற்ற வைத்து சமைத்து, தானும் தின்று மற்றவர்களுக்கும் பகிரும் கருப்பு தங்கம்.!

#04 தங்களது தோழி அழகான, தெளிவான மற்றும் வெளிச்சமான புகைப்படத்தை எடுக்க உதவும்

#04 தங்களது தோழி அழகான, தெளிவான மற்றும் வெளிச்சமான புகைப்படத்தை எடுக்க உதவும் "பிளாஷ்லைட்" நண்பர்கள்.!

நமக்கும் தான் இருக்கானுங்களே சில்ர பயலுங்க.. பாத்ரூம் ல மட்டும் தான் தனியா போட்டோ எடுக்க விடுவானுங்க.. மத்த நேரமெல்லாம் வெறும் க்ரூப்பி தான்.! என்ன பண்ணுறது நமக்கு வாய்ச்சது அப்டி.!

#05 பொதுநலன் கருதி யாரோ ஒருவர்.!

#05 பொதுநலன் கருதி யாரோ ஒருவர்.!

பஸ் சீட்ல ரெண்டு காலையும் நல்லா அகட்டி வச்சிக்கிட்டு.. தான் மட்டும் வசதியா உட்காரும் இந்த காலகட்டத்துல.. தான் மட்டும் சார்ஜ் பண்ணக்கூடாது எல்லாரும் சார்ஜ் பண்ணிக்கட்டும்னு ஜன்க்ஷன் பாக்ஸை வெளியே எடுத்து வச்சான் பாரு, அவன் தான் டா உண்மையான பொதுநலபாதி.!

#06 அடிக்கிற வெயில்ல.. எவ்வளவு தெளிவா யோசிச்சு இருக்கானுங்க.!

#06 அடிக்கிற வெயில்ல.. எவ்வளவு தெளிவா யோசிச்சு இருக்கானுங்க.!

சம்மர்ல சீக்கிரமா ஆபிஸ் போய்ட்டு லேட்டா வர்றதுக்கு மிக முக்கியமான காரணமே - ஏசி தான். அப்படியான மிக முக்கியமான ஏசி காத்து.. என் பக்கம் வரல.. அவன் பக்கம் மட்டும் தான் போகுதுனு, ஏதேனும் கலகம் உண்டான என்ன பண்ணனும்.? இப்டி "காத்த" பிரிச்சு விட்டுடனும்.!

#07 நவீன வாழ்விற்கு தேவையான மிக முக்கியமான திறமை.!

#07 நவீன வாழ்விற்கு தேவையான மிக முக்கியமான திறமை.!


புக்கு வாங்கிட்டு வானு சொல்ற வாத்தியாரா பாத்துருக்கேன்; ஏன் டா இன்னும் புக்கு வாங்கலனு சொல்லி அடிச்ச வாத்தியாரா பாத்துருக்கேன், புக்கு வாங்க காசு இல்லனா காசு கொடுத்த வாத்தியார கூட பாத்துருக்கேன்.ஆனா இது வேற லெவல் - அமேசான் வலைத்தளத்தில் மிக மலிவான விலைக்கு புத்தங்களை வாங்குவது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கும் பேராசிரியர்.!

#08 நம்பி போய்ட்டு வாங்க.. நாங்க இருக்கோம்.!

#08 நம்பி போய்ட்டு வாங்க.. நாங்க இருக்கோம்.!

நீ கருப்பா.. சிவப்பானு.. எனக்கு தெரியாது.. ஆனா உனக்கு ஒரு பிரச்னைனா.. நான் ஏறி நிப்பேன் இல்லனா ஏறி வசதியா உக்காந்துப்பேன். இஸ்தான்புல் உள்ளூர்வாசிகள், தன் நாட்டிற்கு சுற்றுலா வந்த நபர் ஒருவரின் கார் ஆனது கடலுக்குள் விழாமல் இருக்க, அதன் மேலே ஏறி அமர்ந்துகொண்டு, காரின் ஓனர் வரும் வரை (ஹாயாக மொபைல் நொண்டிக்கொண்டு) காத்திருந்த காட்சி.!

Best Mobiles in India

English summary
Creative People Who Prove That Anyone Can Be a Hero. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X