2016-ன் 'வாவ்' சொல்ல வைக்கும் பைத்தியக்காராத்தனமான கேஜெட்கள்..!

|

தொழில்நுட்ப வளர்ச்சியை தினந்தோறும் அறிமுகம் செய்யப்படும் கருவிகளை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். அப்படி இருக்க பல்வேறு நிறுவனங்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் கருவிகளை தயாரித்து வருகின்றது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்ணை கவரும் விதத்தில் உள்ளன. இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு வளர்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அறிய கண்டுபிடிப்புகளாக விளங்கும் கேஜெட்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

Segway Advanced Robot – டிஸ்டுடன் ஒரு பெர்ஸ்னல் உதவியாளர் :

Segway Advanced Robot – டிஸ்டுடன் ஒரு பெர்ஸ்னல் உதவியாளர் :

இது மிகவும் சமீபத்திய கண்டுபிடிப்பு. இதை விட அட்வான்ஸ்டு மொபைல் கிடையாது. இவை சாதரணமான வேக்கம் கிலீனர் ரோபோக்களை போல் செயல் படுவதில்லை. இவை ஒரு டிவிஸ்டுடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய segway தயாரிப்பு உலகின் பெஸ்ட் தயாரிப்பாக இருக்கும். இதனால் பெர்ஸ்னல் அஸிஸ்டண்டாகவும் செயல் புரிய முடியும்.

Samsung Modular TV – பெரிய டிவிக்கு இரண்டு டிவியை இணைத்து தயாரிப்பு :

Samsung Modular TV – பெரிய டிவிக்கு இரண்டு டிவியை இணைத்து தயாரிப்பு :

CES 2016 இல் கொரியன் எலக்ட்ரானிக்ஸின் அறிய கண்டுபிடிப்பு இந்த பெரிய டிவி. உடனே இரண்டு 34 இன்ச் டிவியை இணைத்து 64 இன்ச் டிவியாக்கி விட்டார்கள் என்று எண்ண வேண்டாம். இதில் எண்ணற்ற டிஸ்ப்ளேக்கள் தனி தனியாக செயல் புரியும் திறனுடன் செயல் புரிகின்றது. வீடுகளுக்கு மிகவும் உதவியாக இது இருக்கும். அதை விட வணிக இடங்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும்.

Chevrolet Bolt -  Teslaவை விட விலை கம்மி :

Chevrolet Bolt - Teslaவை விட விலை கம்மி :

பெட்ரோல் மற்றும் டீஸல் கார்களை விட இப்பொழுது எலக்ட்ரானிக் கார்களுக்கு மவுசு அதிகம். இதில் உள்ள பெரிய பிரச்சனை அதிக விலைதான். ஆனால் பெட்ரோல் டீஸல் விலையை பார்க்கும் போது அனைவரும் எலக்ட்ரானிக் கார்களை தேர்ந்தெடுக்கின்றனர். அந்தவகையில் டெஸ்லாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது மிகவும் விலை கம்மியான கார். இதன் விலை $30,000 அதாவது சரியாக 19.5 லட்சம். இது மாடர்ன் hatchback வடிவத்தில் 200 மைல் கடக்கும் திறனுடன் 10.2 இன்ச் டச்திரை டிஸ்ப்ளே கொண்ட டேஷ் உடன் ஜம்மென்று உள்ளது.

Livestream Movi – நிகழ்வுகளை அப்படியே படம் பிடிப்பது :

Livestream Movi – நிகழ்வுகளை அப்படியே படம் பிடிப்பது :

உங்கள் வழ்க்கையின் பல சந்தோஷமான தருணங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். அதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். நாங்கள் சாதரணமான கேமராவை பற்றி பேசவில்லை. 4K கேமராவை கொண்ட ஒரு movi இந்த Livestreammovi. இதை உங்கள் ஐபோனுடன் இணைத்து கொள்ள முடியும். இதில் zoom, cut போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை $399 அதாவது ரூபாய் 26,000.

Eurocom Sky X9W - மிருகம் :

Eurocom Sky X9W - மிருகம் :

நீங்கள் கனவிலும் நினைக்க முடியாத ஒரு வரபிரசாதம் இந்த
Eurocom Sky X9W - The Beast. சமீபத்திய Intel Coreஆல் செய்ய பட்டது. இந்த லேப்டாப் 64GB RAM, 5TB SSD அம்சத்துடன் வருகின்றது. இதில் உள்ள 6 USB portsஇல் ஒரு USB 3.1 மற்றும் 5 USB 3.0 உள்ளன. நாம் எதிர்பார்த்தது போன்று இந்த Eurocom Sky X9W $11,473 விலையில் அதாவது Rs 7.75 லட்சத்திற்கு வருகின்றது.

DietSensor SciO - உணவை ஸ்கேன் செய்ய :

DietSensor SciO - உணவை ஸ்கேன் செய்ய :

இப்பொழுது அனைவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவே விரும்புகின்றனர். துரித உணவுகளுக்கு தடை விதிக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்த DietSensor SciO Food Scanner ஒரு வர பிரசாதம். இதில் வரும் உணவு ஸ்கேனரால் உணவில் உள்ள கெமிக்கலை கண்டு பிடிக்க முடியும். இதில் உள்ள ஒரே பிரச்சனை ஒரு நேரத்தில் ஒரு உணவை மட்டும்தான் இதனால் ஸ்கேன் செய்ய முடியும்.

Faraday Future FFZero1 - எதிர்காலத்தை பார்வை இடுவது :

Faraday Future FFZero1 - எதிர்காலத்தை பார்வை இடுவது :

இந்த எலக்ட்ரானிக் கார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன் 3 நொடியில் 0-60 kmph வேகத்தில் செல்லக்கூடியது. இதனால் 320kmph வேகத்துக்கு செல்ல முடியும். இந்த வருடத்தின் மிக பெரிய இடத்தை இது தக்க வைத்து கொள்ளும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

பேரெட் டிஸ்கோ - சும்மா பறக்க விட்டு பாருங்க :

பேரெட் டிஸ்கோ - சும்மா பறக்க விட்டு பாருங்க :

எல்லா டிஸ்கோக்களையும் தோற்கடித்து விட்டது இந்த பேரெட் டிஸ்கோ. அப்படியே தூக்கி வீசிய நேரத்தில் காற்றை கிழித்து கொண்டு பறக்கக்கூடிய இது தற்பொழுது அதிக மக்களின் அன்பை பெற்று விட்டது. இது 80kmph போன்ற வேகத்தை கொண்டுள்ளது. 45 நிமிடங்களுக்கு இது பறந்து வாய் பிளக்க வைக்கின்றது.

மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய LG டிஸ்ப்ளே - சும்மா சுத்தலாம் வாங்க :

மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய LG டிஸ்ப்ளே - சும்மா சுத்தலாம் வாங்க :

இந்த வகை டிஸ்ப்ளேக்கள் அவை வாக்குகொடுப்பதை விட ஏமாற்றத்தை கொடுக்கின்றது என்ற கருத்து பொதுவில் இருந்தாலும் இந்த சுற்றக்கூடிய LG டிஸ்ப்ளே எந்த விதத்திலும் ஏமாற்றாது. இதன் தொழில்நுட்பம் எண்ணற்ற அம்சங்களை கொண்டது. இந்த கொரியன் எலக்ட்ரானிக் டிவைஸ் உண்மையில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஃப்ரீடம் 251 வேண்டாம், ரூ.499-க்கு டாப் 10 போன்கள் இருக்கு..!!


டாப் 10 போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் (ஆண்ராய்டு)..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Crazy Gadgets of 2016 will leave you in awe. Read more about this inTamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X