Home
Gadgets

Mobile டிஸ்பிளே உடைய கூடாதா? இனி இந்த அம்சம் இருக்கானு பாருங்க.. இது இருந்தா Corning டிஸ்பிளே எளிதில் உடையாது

கார்னிங் (Corning) நிறுவனம் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் (affordable smartphone) மற்றும் பட்ஜெட் மொபைல் (budget mobile) சாதனங்களில் இருக்கும் டிஸ்பிளேக்களை (display) உறுதியானதாக மாற்றக்கூடிய புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை (gorilla glass protection) அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே வலிமையை (display strength) பற்றி நாம் குறிப்பிட்டு கூற வேண்டிய அவசியமே இருக்காது. காரணம், இவை அவ்வளவு சிறந்த வலிமையையும், உறுதியையும் வழங்குவதில்லை என்பது ஸ்மார்ட்போன் பயனர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இது பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கிய ஒரு விஷயம் என்று கூற நாம் கூறலாம்.

Mobile டிஸ்பிளே உடைய கூடாதா? இனி இந்த அம்சம் இருக்கானு பாருங்க..

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i):

சிரிய உயரத்தில் இருந்து ஸ்மார்ட்போன் கீழே விளைந்தால் கூட, இந்த போன்களின் டிஸ்பிளே சல்லி சல்லியாக நொறுங்கிவிடும் (mobile display broken damage). இந்த சிக்கல் பற்றி பலமுறை புகைரளிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் டிஸ்பிளே தயாரிக்கும் நிறுவனங்களிடம், டிஸ்பிளே வலிமையை உயர்த்த கோரி பலமுறை அறிவுறுத்தல்களை முன்வைத்திருந்தனர். இந்த சிக்கல்களுக்கு ஒருவழியாக கார்னிங் (Corning display manufacturer) நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) என்ற டிஸ்பிளே பாதுகாப்பு (display protection) வழங்கப்படும் என்று கார்னிங் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக, டிஸ்பிளே வலிமையை (increased display strength) பல மடங்கு அதிகரித்துள்ளதாக கார்னிங் நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக, இதன் உடையும் (broken drop test) திறன் மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் (scratch resistance) பண்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கார்னிங் நிறுவனம் கூறியுள்ளது. முந்தைய கார்னிங் கொரில்லா கிளாஸ் வெர்ஷன் உடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பு ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கார்னிங் நிறுவனம் கூறியுள்ளது.

மலிவு விலை ஸ்மார்ட்போன் மற்றும் பட்ஜெட் மொபைல் டிஸ்பிளே உடைய கூடாதா? அப்போ இது இருக்கனும்:

கார்னிங் நிறுவனம் இதற்கு முன்பு பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனங்களுக்காக வழங்கிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை (corning gorilla glass 5 protection) விட இது பலமானது என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், இந்த புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i டிஸ்பிளேக்கள் 1 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கூட உடையாது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

தெரியாதவர்களுக்கு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு (corning gorilla glass 5 protection) 0.5 மீட்டர் உயரம் வரை மட்டுமே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் உங்கள் ஸ்மார்ட்போன் கைநழுவி கீழே விழுந்தவுடன் டிஸ்பிளே மட்டும் எளிதில் நொறுங்கிவிடுகிறது. இனி நீங்கள் வாங்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் மலிவு விலை போன்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Corning Gorilla Glass 7i Protection Display Can Survive 1 Meter Height Drop For Midrange and Budget Mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X