பட்ஜெட் விலையில் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
கூல்பேட் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இந்நிலையில் கூல்பேட் நிறுவனம் இந்தியா ஆடியோ சந்தையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கூல் பேஸ் பட்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது டீப் பேஸ் டிரைவர்கள், ப்ளூடூத் 5, டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய சாதனத்தில் 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இவை சிறப்பான பேஸ் மற்றும் தலை சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே இது சீரான மற்றும் வேகமான கனெக்டிவிட்டியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடை குறைந்த டால்பின் டிசைன் 2.0 கொண்டிருக்கும் கூல் பேஸ் பட்ஸ் 49 கிராம் எடை கொண்டிருக்கிறது.
அதேபோல் இந்த சாதனத்தின் சார்ஜிங் கேஸ் டிஜிட்டல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இது பேட்டரி அளவை காண்பிக்கிறது. மேலும் இதன் இயர்பட்ஸ் ஒவ்வொன்றிலும் 40 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன.

இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் சார்ஜிங் கேஸ்சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்ஸ் மாடலை சுமார் 20 மணி நேரம் பயன்படுத்தலாம்.

கூல்பேட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது குவிக் சார்ஜ் வசதியை கொண்டுள்ளது. இதனை 15 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேர்த்திற்கு பயன்படுத்தலாம்.

குறிப்பாக கூல்பேட் கூல் பேஸ் பட்ஸ் மாடல் ரூ.1199 என்ற விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications