32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே! 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்!

|

உலகளாவிய டெலிவிஷன் பிராண்டான கூகா (Coocaa) நிறுவனம் இந்தியச் சந்தையில் முதல் முறையாக 4 புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் கால்பதித்துள்ளது. தற்பொழுது உள்ள ஸ்மார்ட் டிவி சந்தை நிலவரப்படி சியோமி நிறுவனம் தான் மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்து வருகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் லினக்ஸ் ஸ்மார்ட் டிவி

ஆண்ட்ராய்டு மற்றும் லினக்ஸ் ஸ்மார்ட் டிவி

தற்பொழுது இந்நிறுவனத்திற்குப் போட்டியாக, Coocaa நிறுவனமும் மலிவு விலை ஸ்மார்ட் டிவிகளுடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது. கூகா (Coocaa) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 4 ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு டிவிகள் ஆண்ட்ராய்டு மாடலாகவும், இரண்டு டிவிகள் லினக்ஸ் மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே குறைந்த விலையில்

பெரிய டிஸ்பிளே குறைந்த விலையில்

Coocaa 50' இன்ச் மற்றும் 55' இன்ச் மற்றும் 32' இன்ச் ஆகிய டிஸ்பிளே அளவுகளில் இந்த டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.! வெறுப்பில் ஜியோ.!இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.! வெறுப்பில் ஜியோ.!

Coocaa டிவி

Coocaa டிவி

Coocaa நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய டிவிகள் அனைத்தும் பெஸல்லெஸ் ஸ்கிரீன் டிசைன் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த Coocaa டிவிகளில் டால்பி விஷன், டால்பி ஆடியோ, டூயல் ஏஐ மற்றும் வாய்ஸ் கட்டுப்பாடு, குவாட் கோர் பிராசஸர், ஆன்டி ப்ளூ லைட் டெக்னாலஜி மற்றும் நேட்டிவ் வீடியோ காலிங் போன்ற சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

55 இன்ச் ஸ்மார்ட் டிவி

55 இன்ச் ஸ்மார்ட் டிவி

Coocaa நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்டிவிகள், தற்பொழுது முதல் பிளிப்கார்ட் தலத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 50S3G மற்றும் 55S3G என்பது கூகா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி மாடல்களாகும், மாடல் எண்ணில் குறிப்பிட்டுள்ளது போல 50 மற்றும் 55 என்ற எண்கள் அதன் டிஸ்பிளே இன்ச் அளவை குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்! ஸ்தம்பித்த உலக நாடுகள்!வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்! ஸ்தம்பித்த உலக நாடுகள்!

 கூகா நிறுவனத்தின் 50S3N லினக்ஸ் டிவி

கூகா நிறுவனத்தின் 50S3N லினக்ஸ் டிவி

அதேபோல் கூகா நிறுவனம் 50S3N என்ற மாடல் பெயரில் லினக்ஸ் தளத்தில் ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்துள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்து மாடல்களிலும் ஒரே மாதிரியான சேவைகளே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் 4K அல்ட்ரா எச்டி மற்றும் எச்.டி.ஆர் 10 ரெடி ஆதரவு, ஆன்டி ப்ளூ லைட் டெக்னாலஜி, டால்பி விஷன், டால்பி ஆடியோ, டிடிஎஸ், மிரகாஸ்ட், நெட்ஃபிலிக்ஸ் & அமேசான் பிரைம் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் ஆகிய அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது

அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது

கூகா டிவிகளின் அனைத்து அம்சங்களும் ஒன்றாக இருப்பினும் லினக்ஸ் ஸ்மார்ட் டிவிகளில் மட்டும் வாய்ஸ் கண்ட்ரோல் சேவை கிடையாது. ஏனெனில் வாய்ஸ் கண்ட்ரோல் சேவையானது ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே எடுக்கும் என்பதே காரணம். அதுதவிர நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே மற்றும் லைவ் டிவி போன்ற ஆப்ஸ்கள் அனைத்தும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

இனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சைஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

பிளிக்ப்பர்ட் தளத்தில், Coocaa 55S3G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.31,499 என்ற விலையிலும், Coocaa 50S3G ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.28,499 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல் Coocaa 50S3N லினக்ஸ் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.24,499 என்ற விலையிலும், இதன் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி நம்ப முடியாத விலையான ரூ.8,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Coocaa Launches 32-inch 4K Smart Tv in India At Rs.8,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X