Home
Gadgets

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

கூகா (Coocaa) நிறுவனத்தின் 43 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43Y73 என்ற மாடல் நம்பர் கொண்ட Coocaa பிரேம்லெஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Coocaa Frameless 43 inch Ultra HD 4K Smart LED Google TV) மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே குறைந்த விலையில் இந்த டிவியை வாங்க முடியும்.

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

Coocaa பிரேம்லெஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

Chameleon எக்ஸ்ட்ரீம் AI PQ எஞ்சின் ஆதரவு இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஏஆர்எம் கார்டெக்ஸ் சிஏ53 (ARM Cortex CA53) பிராசஸர் உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மாலி ஜி52 (MaliG52) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த Coocaa டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஒரு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளது. குறிப்பாக பிரேம்லெஸ் டிசைன் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டால்பி அட்மாஸ்(Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வைஃபை, ப்ளுடூத், ஆப்டிக்கல் ஆடியோ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த Coocaa டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Coocaa Frameless 43 inch 4K LED Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X