Home
Gadgets

குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா? அப்போ இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

தற்போது அமேசான், பிளப்கார்ட் தளங்களில் 32 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக சில ஸ்மார்ட் டிவிகள் ரூ.10000-க்கு கீழ் கூட வாங்க கிடைக்கின்றன. ஆனாலும் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் மலிவு விலையில் ஸ்மார்ட் டிவியை வாங்கிய பின்பு அந்த டிவியில் சிறந்த தரம் இல்லையெனில் வாங்கியது வீண் தானே. குறிப்பாக ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது தள்ளுபடி விலை இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கவும். குறிப்பாக டிவி விலை சற்று உயர்வாக இருந்தாலும் மேம்பட்ட அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றைக் கவனிப்பது மிகவும் அவசியம் ஆகும்.

குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா?

அதுவும் ஸ்மார்ட் டிவியில் டிஸ்பிளே அம்சங்கள், ஆடியோ, கனெக்டிவிட்டி அம்சங்கள் போன்றவற்றை முதலில் கவனிக்க வேண்டும். அதன்பின்பு நீங்கள் வாங்க கூடிய ஸ்மார்ட் டிவிக்கு வாரண்டி எத்தனை மாதங்கள் கொடுக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், டிவி வாங்கும் முன்பு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

1. முதலில் நீங்கள் வாங்க இருக்கும் டிவியில் எந்த வகையான பேனல் பயன்படுத்தப்படுகிறது என்பதை பாருங்கள். அதாவது எல்சிடி, ஒஎல்இடி, க்யூஎல்இடி பேனல்கள் இருப்பது மிகவும் நல்லது. அதேபோல் டிவிகளில் எச்டிஆர் (HDR) அம்சம் இருப்பதைக் கவனியுங்கள், இது படங்களின் கான்ட்ராஸ்ட் மற்றும் பிரைட்னஸ் அம்சங்களை மேம்படுத்துகிறது, மேலும் ஒவ்வொரு காட்சிக்கும் தெளிவான நிறங்களைக் கொண்டு வருகிறது.

2. ஸ்மார்ட் டிவியில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெற குறைந்தது 30W ஸ்பீக்கர்கள் இருப்பது நல்லது. அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ்: எக்ஸ் (DTS:X) ஆடியோ டெக்னாலஜிகளை ஆதரிக்கும் டிவிகளைத் தேர்வு செய்யுங்கள். இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட டிவிகள் (TV) சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு கேமிங் வசதிகளுக்கும் மிக அருமையாகப் பயன்படும்.

3. ஸ்மார்ட் டிவி வாங்கும் முன்பு முதலில் ரேம் மற்றும் மெமரி வசதியை கவனிக்க வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் டிவியில் அதிக ரேம் மற்றும் மெமரி இருந்தால், அது சிறப்பாக செயல்படும். அதேசமயம் பலவேறு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு ஸ்மார்ட் டிவி
ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் உடன் வருகிறதா என்பதையும் உறுதி செய்யவும். குறிப்பாக இப்போது வரும் அனைத்து டிவிகளில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களும் இருக்கின்றன.

குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி வாங்கப் போறீங்களா?

4. அதேபோல் ஸ்மார்ட் டிவி வாங்கும் போது வெறும் யுஎஸ்பி (USB) போர்ட்இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கக்கூடாது. அதாவது எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத், வைஃபை, லேன் போர்ட் (LAN Port), ஆப்டிகல் (Optical), ஆர்எப் (RF) போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் பார்க்க வேண்டும். மேலும் கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்சா போன்ற அம்சங்கள் கொண்ட டிவிகளையும் வாங்குவது மிகவும் நல்லது.

5. குறிப்பாக சிறந்த இயங்குதளம் (OS) கொண்ட டிவிகளை வாங்குவது நல்லது. அதாவது எல்ஜியின் வெப்ஓஎஸ், சாம்சங்கின் டைசன் ஓஎஸ், அல்லது ஆண்ட்ராய்டு ஒஎஸ் கொண்ட டிவியை நீங்கள் தேர்வுசெய்தாலும், மேம்பட்ட புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் டிவிக்கு எத்தனை மாதம் வாரண்டி கொடுக்கப்படுகிறது என்பதைக் கவனித்து அதன் பின்பு டிவி வாங்குவது நல்லது. அதாவது நீங்கள் டிவியை வாங்கிய பின்பு எதாவது டிவியில் பிரச்சனை வந்தால் உடனே இந்த வாரண்டியை வைத்து ஒன்று சரி செய்துவிட முடியும் அல்லது மாற்றிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Consider these five features before buying a cheap smart TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X