தலைவன் வேற ரகம்.. 46 நாள் பேட்டரி ஆயுள்.. கழட்டி மாட்டும் வாட்ச் பேசல்.. CMF Watch Pro 2 விலை என்ன?
நத்திங் (Nothing) என்ற அட்டகாசமான நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எஃப் (CMF) இன்று அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனமான சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) டிவைஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 46 நாள் பேட்டரி ஆயுளுடன் (46 days battery life) அலுமினியத்தால் உருவான ரவுண்ட் டயல் (aluminium round dial) உடன் வருகிறது. இதன் வாட்ச் ஃபிரேம்கள் கழட்டி மாட்ட கூடிய பேசல் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 2 வகையான பேசல் மற்றும் ஸ்ட்ராப்களை கொண்டுள்ளது.
சிஎம்எஃப் (CMF) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 ஸ்மார்ட்வாட்ச் (CMF Watch Pro 2 Smartwatch) சாதனம் லிக்விட் சிலிக்கான் மற்றும் வீகன் லெதர் என்று இரண்டு ஸ்டைலான விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனரின் விருப்பம் போல ஸ்ட்ராப்களை எளிமையாக மாற்றம் செய்துகொள்ளும் அனுபவத்தை இந்த ஸ்மார்ட்வாட்ச் அனுமதிக்கிறது. இந்த சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 டிவைஸ் 1.32" இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது.

சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2):
இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது. இது 466 x 466 பிக்சல் ஆதரவுடன் 620 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 100 வாட்ச் பேஸ் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய விட்ஜெட் ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3D வார்ம் அப் எக்ஸர்சைஸ் உடன் 120 ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது.
கூடுதல் அம்சங்களாக, இதில் இன்பில்ட் ஆக மல்டி-சிஸ்டம் ஜி.பி.எஸ் (GPS) அம்சம் இடம்பெறுகிறது. இத்துடன் ஃபங்க்ஷன் கிரௌன் (Functional Crown), கெஸ்ச்சர் கண்ட்ரோல் (Gesture control), AI நாய்ஸ் ரிடக்ஷன் அம்சத்துடன் புளூடூத் காலிங் (Bluetooth voice calling with AI noise reduction) , நோட்டிபிகேஷன் (Notification), ரிமோட் கேமரா கண்ட்ரோல் (remote camera control), மற்றும் வெதர் அப்டேட் (weather report) போன்றவற்றை இந்த வாட்ச் கொண்டுள்ளது.
இந்த புதிய சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 ஸ்மார்ட்வாட்ச் (CMF Watch Pro 2 Smartwatch) சாதனம் 305mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இது சிங்கிள் சார்ஜிங்கில் 11 நாள் ஆயுளை வழங்குகிறது. பவர் சேவிங் மோட் விருப்பத்தில் இயக்கப்படும் பொழுது இது 46 நாள் பேட்டரி ஆயுளை வழங்குமென்று CMF நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைவன் வேற ரகம்.. 46 நாள் பேட்டரி ஆயுள்.. CMF Watch Pro 2 விலை:
GPS மோட் உடன் இயக்கப்படும் பொழுது இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 25 மணி நேரம் மட்டுமே பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த CMF Watch Pro 2 சாதனம் டார்க் க்ரேய் மற்றும் ஆஷ் க்ரேய் லிக்விட் சிலிக்கான் ஸ்ட்ராப் மாடல் ரூ. 4,999 விலையில் வருகிறது. இதன் ப்ளூ மற்றும் ஆரஞ்சு வீகன் லெதர் மாடல் ரூ.5,499 விலையில் வருகிறது.
CMF Watch Pro 2 சாதனத்தின் பேசல் + ஸ்ட்ராப் செட் இப்போது ரூ. 749 விலை முதல் கிடைக்கும். இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் CMF வலைத்தளம் வழியாக ஜூலை 12, 2024 மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அறிமுக சலுகையாக ரூ. 1000 விலை குறைப்பும் அந்நாளில் கிடைக்குமென்று CMF அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








