Home
Gadgets

இரண்டு டயல் பேசல் உடன் CMF Watch Pro 2-ஆ? ஈஸியா கழட்டி மாட்டலாமா? ராஷ்மிகா கையை நல்லா பாருங்க..

நத்திங் (Nothing) நிறுவனத்திற்கு சொந்தமான சிஎம்எஃப் (CMF) பிராண்டு வரும் ஜூலை 8, 2024 ஆம் தேதி புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் (3 New Devices From CMF) செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிஎம்எஃப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் சாதனமான சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) சாதனத்துடன், நிறுவனம் சிஎம்எஃப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) மற்றும் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) போன்ற சாதனங்களையும் அறிமுகம் செய்யவுள்ளது.

ஜூலை 8ம் தேதி நிகழவிருக்கும் சிஎம்எஃப் நிகழ்விற்கு முன்பாக சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) சாதனம் குறித்த ஒரு மிகவும் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. வெளிவரவிருக்கும் புதிய சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 சாதனம் கழட்டி மாட்ட கூடிய இரண்டு வகையான மேக்னெட்டிக் பேசல்களுடன் வருமென்று கூறப்பட்டுள்ளது. ஆம், இந்த சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 சாதனத்தின் வாட்ச் டயல் ஃபிரேமை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

இரண்டு டயல் பேசல் உடன் CMF Watch Pro 2-ஆ? ஈஸியா கழட்டி மாட்டலாமா?

கழட்டி மாட்ட கூடிய இரண்டு வகையான மேக்னெட்டிக் பேசல்களுடன் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2):

அதவாது, சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) சாதனம் இன்டர்சேஞ்சபில் பேசல் (Interchangeable Bezel) ஆக்சஸரீஸ் உடன் வருகிறது. இதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கேற்ப நேரங்களில் உங்கள் சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 சாதனத்தின் பேசல்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு, இந்த அம்சத்தை நாம் பெரியளவில் எந்த ஸ்மார்ட்வாட்ச்களிலும் பார்க்கவில்லை என்பதனால், இது மக்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நத்திங் நிறுவனத்தின் இந்த டிசைன் உண்மையில் பாராட்டிற்குரியது. காரணம், CMF தயாரிப்புகள் பெரும்பாலும் பட்ஜெட் செக்மென்டை குறிவைத்து வெளியிடப்படுவது வழக்கம். இப்போது பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் புதிதாக வரக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் நிறுவனம் இத்தகைய அம்சத்தை வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறை CMF அறிமுக நிகழ்வு கட்டாயம் மக்களை மகிழ்ச்சியடைய செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் சாதனமான சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) சாதனத்துடன் நிறுவனம் சில ஆக்சஸரீஸ் சாதனங்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. இத்துடன் தற்போது இன்டர்சேஞ்சபில் பேசல் கருவிகளுடன் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது என்பதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. CMF இந்த வாட்ச்சின் புதிய அம்சம் குறித்த தகவலை அதன் எக்ஸ் பக்கம் வழியாக வெளியிட்டுள்ளது.

சிஎம்எப் பிராண்டின் அம்பாஸடர் ராஷ்மிகா மந்தனா (CMF Brand Ambassado Rashmika Mandanna):

இதில் சிஎம்எப் பிராண்டின் அம்பாஸடர் (CMF Brand Ambassador) ஆன ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) கையில் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 சாதனம் இன்டர்சேஞ்சபில் பேசல்களுடன் காட்சிப்படுத்தும் போஸ்டரை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) சாதனம் CMF பிராண்டின் சிக்னேச்சர் கலரான ஆரஞ்சு நிற கலருடன் காணப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான மற்ற லீக் தகவல்கள் CMF Watch Pro 2 சாதனம் பிளாக் மற்றும் க்ரேய் நிறங்களில் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தின் வாட்ச் பேஸ்களை பயனர்கள் சொந்தமாக கஸ்டமைஸ் செய்யும் விருப்பமும் இருக்கக்கூடும் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Watch Pro 2 Teased With Interchangeable Bezels In CMF Brand Ambassador Rashmika Mandanna Hands
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X