Home
Gadgets

பின்றாப்லயே இவரு.. சிங்கிள் சார்ஜில் 60 நாட்கள் பேக்கப்.. CMF Watch 3 Pro வருது உறுதி.. எப்போது?

இந்திய மார்கெட்டில் சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ (CMF Watch 3 Pro) மாடலின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 60 நாட்களுக்கு பேக்கப் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் உள்ளிட்ட பீச்சர்களுடன் வெளியாக உள்ளது.

வருகிற மே 6ஆம் தேதி இந்த சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டிசைன், கலர் உள்ளிட்ட சில பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கிறது. ஆனால், குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். குளோபல் மார்கெட்டில் ரூ.8,000 பட்ஜெட்டில் வெளியாகியது.

பின்றாப்லயே இவரு.. சிங்கிள் சார்ஜில் 60 நாட்கள் பேக்கப்.. மாடல்?

ஆகவே, இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், குளோபல் மார்கெட்டில் வெளியாகும், சிஎம்எப் போன்களில் கிடைத்த பீச்சர்களே இந்திய வெர்ஷனில் கிடைக்கும். டார்க் கிரே (Dark Grey), லைட் கிரே (Light Grey) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இப்போது, குளோபல் வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களை பார்க்கலாம்.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ முக்கிய அம்சங்கள்: 466 x 466 பிக்சல்களுடன் 1.32 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ கொண்டுள்ளது. 60FPS ரேட் மற்றும் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கூடுதலாக 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. ஹார்ட் ரேட், எஸ்பிஓ2, ஆம்பியன்ட் லைட் மற்றும் ஆக்ஸிலரேட்டர் சென்சார் கிடைக்கிறது.

ஆகவே, பெரும்பாலான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்கள் உள்ளன. 24 மணி நேரமும் மெசர் செய்யும்படி ஆட்டோமேட்டிக் ஹார்ட் ரேட் மானிட்டர் உள்ளது. ஆக்டிவ் ஸ்கோர் (Active Score), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் பிளட் ஆக்ஸிஜன் லெவல் டிராக்கிங் (Blood Oxygen Level Tracking) கிடைக்கிறது. வுமென் ஹெல்த் டிராக்கிங் உள்ளது.

மேலும், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) உள்ளது. கஸ்டமைசபிள் ஆப்ஷன்களுடன் 120+ சிக்னேச்சர் வாட்ச் பேஸ்கள் (Signature Watch Faces) கிடைக்கின்றன. இதில் டைனாமிக் வாட்ச் பேஸ்கள் (Dynamic Watch Faces), இன்டர்ஆக்டிவ் வாட்ச் பேஸ்கள் (Interactive Watch Faces) மற்றும் ஸ்டாடிக் வாட்ச் பேஸ்கள் (Static Watch Faces) இருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்காக 130+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. 7 ஸ்மார்ட் ரிககனைசேஷன் ஆக்டிவிட்கள் (Smart Recognition Activities) கிடைக்கின்றன. அதாவது, ரன்னிங், சைக்கிளிங் உள்ளிட்ட ஆக்டிவிட்டிகளை ஆட்டோமேட்டிக்காக டிடெக்ட் செய்து கொள்ளும். ப்ளூடூத் காலிங் சப்போட் கொண்ட மாடலாக சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ இருக்கிறது.

ஆகவே, மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர்கள் (Speaker) கிடைக்கின்றன. லேக்-ப்ரீ கனெக்டிவிட்டி கொடுக்க ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், டூயல் பேண்ட் ஜிபி (Dual-band GPS) கிடைக்கிறது. இந்திய வெர்ஷனில் கிடைக்குமா என்பது மே 6ஆம் தேதி வெளியீட்டுக்கு பிறகே தெரியவரும்.

ஃபைண்ட் மை போன், வெதர் அப்டேட்கள், ஃபிளாஷ் லைட் போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ கொடுக்கிறது. பவர் சேவிங் மோடில் 60 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 350mAh பேட்டரி கிடைக்கிறது. நார்மல் மோடில் 13 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

ஹெவி யூசேஜ் மோடில் 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் மற்றும் ஹெவி யூசேஜ் மோடில் 4.5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஜிபிஎஸ் ஆன் செய்து பயன்படுத்தினால், 17.2 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். நத்திங் எக்ஸ் (Nothing X) ஆப் சப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த பீச்சர்களுடன் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
CMF Watch 3 Pro With 13 Day Battery Life To Launch in India on May 6 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X