Home
Gadgets

மே.7 க்கு அப்புறம் இதுதான்.. 60 நாட்கள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், டூயல் பேண்ட் வை-பை கனெக்டிவிட்டி, 60 நாட்களுக்கு பேட்டரி, ப்ளூடூத் காலிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ (CMF Watch 3 Pro) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சிஎம்எப் ஸ்மார்ட்போன்களை போலவே சிஎம்எப் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், பிரீமியம் கனெக்டிவிட்டி மற்றும் ஹெல்த் பீச்சர்களுடன் வெளியாகி வருகின்றன. இந்த சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ மாடலிலும் டூயல் பேண்ட் ஜிபிஎஎஸ், 131 ஸ்போர்ட்ஸ் டிராக்கிங், 4 சேனல் ஹார்ட் ரேட் சென்சார் போன்ற அப்கிரேட் பீச்சர்களை பார்க்க முடிகிறது.

மே.7 க்கு அப்புறம் இதுதான்.. 60 நாட்கள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

நத்திங் ஓஎஸ் கிடைப்பதால், சிஎம்எப் மற்றும் நத்திங் ஸ்மார்ட்போன்களில் சீம்லெஸ் கனெக்டிவிட்டி கிடைக்கும். நத்திங் எக்ஸ் (Nothing X) ஆப் சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டிவிட்டி டிராக்கர், ஹெல்த் மானிட்டர்களின் டேட்டாவை இதில் பார்த்து கொள்ளலாம். மெட்டல் ஃபிரேம் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ அம்சங்கள் (CMF Watch 3 Pro Specifications): 350mAh பேட்டரி மற்றும் மேக்னட்டிக் சார்ஜிங்குடன் கிடைக்கிறது. பவர் சேவிங் மோடில் 60 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஹெவி யூசேஜ் செய்தால், 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஏஓடி மோடில் 4.5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஜிபிஎஸ் மோடில் 17.2 மணி நேரங்களுக்கு மட்டுமே பேக்கப் கிடைக்கும்.

1.43 இன்ச் 466 x 466 பிக்சல் ரெசொலூனுடன் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 670 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 120+ வாட்ச் பேஸ்கள் மற்றும் 131 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. இதில் ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆட்டோ டிடெக்சன் சப்போர்ட் கொடுக்கிறது. ஹார்ட்ரேட் மானிட்டர் உள்ளது.

பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் உள்ளது. ஸ்ட்ரெஸ் மானிட்டரிங், ஸ்லீப் மானிட்டரிங் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் காலிங் கிடைக்கிறது. ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன் கொடுத்துள்ளது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) உள்ளது. டூயல் பேண்ட் வை-பை கிடைக்கிறது. 51 கிராம் எடை மட்டுமே வருகிறது. IP68 ரேட்டிங் கிடைக்கிறது.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ விலை (CMF Watch 3 Pro Price): ரூ.7,999 விலை கொண்ட மாடலாக இந்த சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரூ.1,000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.6,999 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சிஎம்எப் ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

எர்லி பேர்ட் சேல் மே 7ஆம் தேதி தொடங்குகிறது. மே 8ஆம் தேதி ஓப்பன் சேல் தொடங்குகிறது. இதில் மே 7ஆம் தேதி ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அறிமுக சலுகை ரூ.6,999 விலைக்கு கிடைக்கும். டார்க் கிரே (Dark Grey), லைட் கிரே (Light Grey), லைட் கிரீன் (Light Green) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
CMF Watch 3 Pro Dual-band GPS Launched in India At Rs 6999 Introductory Price Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X