Nothing-ன் CMF கிட்ட இருந்து இப்படி இரு Headphone-ஆ.. 100 மணி நேர பேட்டரி, ANC, மாற்றக்கூடிய குஷன்!
நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் (CMF) பிராண்ட் தனது முதல் ஓவர்-தி-இயர் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ (CMF Headphone Pro) என்று அழைக்கப்படும் இந்த ஹெட்ஃபோன் ஆனது மூன்று வெவ்வேறு கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ முக்கிய அம்சங்கள்: சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவில் 40 மிமீ டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 40dB வரையிலான ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) மற்றும் எல்டிஏசி கோடெக் (LDAC codec) உடன் ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் (Hi-Res Audio playback) ஆதரிக்கிறது.

மேலும் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ ஆனது ஒரே சார்ஜில் 100 மணிநேர ஆடியோ பிளேபேக்கையும், 50 மணிநேரம் வரை டாக் டைமையும் வழங்கும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஹெட்ஃபோன்களுடன் சேர்த்து இன்டர்சேஞ்சபிள் குஷன்களையும் (Interchangeable cushions) சிஎம்எப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விலை மற்றும் விற்பனை (CMF Headphone Pro Price): அமெரிக்காவில் இது $99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.8,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதே நேரத்தில் மற்ற பிராந்தியங்களில் இந்த ஹெட்ஃபோனின் விலை அதிகமாக உள்ளடிது. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் முறையே EUR 99 (தோராயமாக ரூ.10,000) மற்றும் GBP 79 (தோராயமாக ரூ.9,420) க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
டார்க் கிரே, லைட் கிரீன் மற்றும் லைட் கிரே ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை. பெரும்பாலான சிஎம்எப் தயாரிப்புகள் இந்திய சந்தைக்கும் வந்துள்ளதால், எப்படியும் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்; எப்போது என்கிற தேதி தெரியவந்தால், உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விரிவான அம்சங்கள் (CMF Headphone Pro Features):
- இது ஏஎன்சி ஆதரவு உடன் வருகிறது. - இது தேவையற்ற சுற்றுப்புற ஒலியை 40dB வரை குறைப்பதாக கூறப்படுகிறது
- இதில் ஹைப்ரிட் ஏஎன்சி அம்சமும் உள்ளது
- இதில் ஒரு ரோலர் டயலும் உள்ளது, இது பயனர்கள் ஒலியளவை சரிசெய்யவும், ஏஎன்சி-ஐ மாற்றவும், இசையை இயக்கவும் அல்லது இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
- எனர்ஜி ஸ்லைடர் உள்ளது. இது பயனர்கள் அவர்கள் கேட்கும் டிராக்கின் அடிப்படையில் பாஸ் மற்றும் ட்ரெபிள் நிலைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- ஸ்பேஷியல் ஆடியோ அல்லது ஏஐ அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்வது போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது.
- விருப்பப்படி கண்ட்ரோல்களை நத்திங் எக்ஸ் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்யலாம்
- குறைவான சிதைவு மற்றும் கூர்மையான தெளிவுக்காக நிக்கல் பூசப்பட்ட டயாபிராம்களுடன் 40மிமீ ட்ரைவர்கள் உள்ளன.
- இது SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் ஆதரிக்கிறது
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 50 மணிநேர டால்க் டைம்
- ஏஎன்சி இயக்கப்பட்டிருக்கும் போது பிளேபேக் நேரம் 50 மணிநேரமாக குறையும்
- இது ஆடியோ பிளேபேக்கிற்கான யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியையும், சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது.
- ஐந்து நிமிட குவிக் சார்ஜிங்குடன் 5 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
- முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணிநேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications