மொத்த மியூசிக் பிரியர்களும் இதுக்கு வெயிட்டிங்.. ANC ஆடியோ.. AI என்ஹான்ஸ்.. புது CMF ஹெட்போன்.. எந்த மாடல்?
நத்திங் (Nothing) நிறுவனத்தின் சிஎம்எப் ஹெட்போன் ப்ரோ (CMF Headphone Pro) மாடலில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎம்எப் பிராண்டின் கீழ் வெளியாகும் முதல் ஓவர்-இயர் ஹெட்போன் மாடலாக இருப்பதால் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. ஏனென்றால் நத்திங் மாடல்களை விட சிஎம்எப் மாடல்கள் விலை குறைவாக இருக்கும். இந்த சிஎம்எப் ஹெட்போன் ப்ரோ மாடலில் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நத்திங் நிறுவனம் டீசர் மூலம் இந்த சிஎம்எப் ஹெட்போன் ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் இது வெளியாக இருக்கிறது. இந்த தேதியை தவிர மற்ற பீச்சர்களை நத்திங் நிறுவனம் உறுதி செய்யவில்லை. இருப்பினும் டிசைன் மற்றும் சில பீச்சர்களை டீசர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிஎம்எப் ஹெட்போன் ப்ரோ (CMF Headphone Pro Specifications): ப்ளூ மற்றும் ஆரஞ்சு ஆகிய கலர்களில் டீசர் வெளியிட்டப்பட்டுள்ளது. அதோடு சிஎம்எப் பிராண்டிங் டெக்ஸ்ட் வழக்கம்போல இடம் பெற்றுள்ளது. எல்இடி பவர் இண்டிகேட்டர் டைம் டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்க்ரோல் வீல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதுபோக ஒரு பவர் பட்டன் இருக்கிறது.
இது ஆன் ஆஃப் பட்டனா அல்லது ஏஎன்சி கண்ட்ரோலுக்கான பட்டனா என்பது தெரியவில்லை. இதில் ஏஐ என்ஹான்ஸ்டு ஆடியோ பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. இதை மட்டுமே டீசரில் பார்க்க முடிகிறது. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதி செய்யப்படும். அதுவே பொறுத்திருந்து பார்க்கலாம். முன்னதாக வெளியான மாடலை இப்போது பார்க்கலாம்.
கடந்த ஜுலை மாதத்தில் நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) வெளியாகியது. இதுவுப் ஓவர்- இயர் ஹெட்போன் மாடலாக இருந்ததால், அதற்கேற்ப விலை மற்றும் பீச்சர்களை கொடுத்தது. இந்தியாவில் ரூ.21,999 பட்ஜெட்டில் வெளியாகியது. இப்போது இதன் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதில் பெரும்பாலான பீச்சர்கள் சிஎம்எப் ஹெட்போன் ப்ரோ மாடலில் கிடைக்க வாய்ப்புள்ளது.
நத்திங் ஹெட்போன் 1 அம்சங்கள் (Nothing Headphone 1 Specifications): இந்த மாடலில் 40 எம்எம் டைனாமிக் டிரைவர் (Dynamic Driver) கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்விஃப்ட் பேர் (Microsoft Swift Pair) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் டூயல் கனெக்டிவிட்டி (Dual Connectivity) கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால் ஹை-ரெஎஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) மற்றும் எல்டிஏசி (LDAC) ஆகிய கோடாக் (Codecs) கிடைக்கின்றன. இன்-இயர் டிடெக்சன் (In-ear detection) வருவதால், காதுகளில் மாட்டும் போது பிளே மற்றும் காதுகளில் இருந்து வெளியே எடுக்கும்போது பாஸ் செய்யப்படும். இதுபோக லோவ் லேக் மோட் (Low Lag Mode) கிடைக்கிறது.
இந்த மோட் மூலம் ஹெட்போன் டூ டிவைஸ் கனெக்டிவிட்டி லேக் ஃப்ரீ அவுட்புட் கொடுக்கும். 42db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) கிடைக்கிறது. இதுபோக என்விரான்மெண்ட் அடாப்டிவ் ஏஎன்சி (Environment Adaptive ANC) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே இன்டோர் மற்றும் அவுட்டோர் ஆடியோ அவுட்புட் நாய்ஸ் இல்லாமல் இருக்கும்.
வாய்ஸ் கால்களுக்காக கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி (Clear Voice Technology) கிடைக்கிறது. ரோலர், பேட்டில் (Paddle) மற்றும் பட்டன் கன்ட்ரோல் கிடைக்கிறது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 1040mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 80 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி மோடில் குறைவாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications