Home
Gadgets

சைலன்ட் ஆக Nothing பார்த்த வேலை.. CMF Watch 3 Pro ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. என்ன விலை?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் (CMF), தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ (CMF Watch 3 Pro) மாடல் ஆகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏஐ ஆதரவு உடனான ஹெல்த் டராக்கிங் அம்சங்கள், 1.43-இன்ச் வட்ட வடிவிலான அமோஎல்இடி ஸ்க்ரீன் மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) அணுகல் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழியாக கிடைக்கும் டேட்டாவை மூன்றாம் தரப்பு ஹெல்த் ஆப்களுடனும் சின்க் செய்யலாம்.

CMF Watch 3 Pro ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. என்ன விலை?

சுவாரசியமாக இது 3டி அனிமேஷன் செய்யப்பட்ட வார்ம்-அப் வழிகாட்டிகள் மற்றும் வழிகாட்டப்பட்ட சுவாசப் பயிற்சிகளை வழங்குகிறது. சிஎம்எப் நிறுவனத்தின் இத லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங், கெஸ்சர் கண்ட்ரோல் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய வாட்ச் ஃபேஸ் ஸ்டுடியோவையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஒரு மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பிற்கான IP68 ரேட்டிங் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.43-இன்ச் வட்ட வடிவிலான AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இது 466x466 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 6ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 670 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸை கொண்டுள்ளது. இந்த வாட்ச் 120 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்களை ஆதரிக்கிறது, இதில் தனிப்பயனாக்கக்கூடிய விருப்பங்களும் அடங்கும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட தூக்க சுழற்சி கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இந்த வாட்ச் இரத்த ஆக்ஸிஜன் அளவு, மன அழுத்த அளவுகள் மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை கண்காணிக்கவும் உதவுகிறது.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்வாட்ச் ஆனது இசை பின்னணி, கேமரா ஷட்டர், விரிவான உடற்பயிற்சி அப்டேட்கள் மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் நத்திங் எக்ஸ் செயலியுடன் இணக்கமாக செயல்படும். இந்த வாட்ச் - சைகை கட்டுப்பாட்டையும் ஆதரிக்கிறது; இதன்கீழ் வெவ்வேறு மணிக்கட்டு அசைவுகள் ஆனது சில செயல்களைத் தூண்டும்.

இது ப்ளூடூத் காலிங், ப்ளூடூத் 5.3 மற்றும் டூயல்-பேண்ட் ஜிபிஎஸ் இணைப்பை வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி 3D அனிமேஷன் செய்யப்பட்ட வார்ம் அப் வழிகாட்டிகள், வழிகாட்டப்பட்ட சுவாசப் பயிற்சிகள் மற்றும் சாட்ஜிபிடி அணுகலையும் கொண்டுள்ளது. இது 350mAh பேட்டரி உடன் வருகிறது.

இது வழக்கமான பயன்பாட்டுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதிக பயன்பாட்டுடன், இந்த கடிகாரம் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும், AOD இயக்கப்பட்டால், இது நான்கு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இத்தாலியில் சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.10,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.8,100 ஆக உள்ளது

குறிப்பிட்ட நாடுகளில் சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது டார்க் கிரே, லைட் கிரே மற்றும் ஆரஞ்சு ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும் என்கிற எந்த விவரங்களும் இல்லை. ஆனால் நிச்சயம் அறிமுகமாகும் ஏனென்றால் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) மாடல் இங்கே வாங்க கிடைக்கிறது. தற்போதுஇது பிளிப்கார்ட் வழியாக ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF By Nothing Silently Launched New Smartwatch CMF Watch 3 Pro Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X