மிரட்டிவிட்டாப்ல CMF.. அல்ட்ரா பேஸ்.. ஸ்பாஷியல் ஆடியோ.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. ரூ.1000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
பேஸ் ஆடியோவில் பின்னிப்பெடல் எடுக்கும்படி டூயல் டிரைவர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பேஸ் டெக்னாலஜி, ஸ்பாஷியல் ஆடியோ எஃபெக்ட், ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்லேஷன், டூயல் கனெக்டிவிட்டி, டச் கன்ட்ரோல், 460mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 (CMF Buds Pro 2) மாடல் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் விற்பனை தேதி, முழு பீச்சர் விவரங்கள் இதோ.
சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 அம்சங்கள் (CMF Buds Pro 2 Specifications): இந்த சிஎம்எப் மாடலில் டூயல் டிரைவர் சிஸ்டம் (Dual Driver System) வருகிறது. ஆகவே, 11 மிமீ பேஸ் டிரைவர் மற்றும் 6 மிமீ மைக்ரோ-பிளானர் ட்வீடர் வருகிறது. ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட் டயல் வால்யூம் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட கேஸ் வருகிறது.

பிரீமியம் டிசைனில் டார்க் கிரே (Dark Grey), லைட் கிரே (Light Grey), ஆரஞ்ச் (Orange) மற்றும் ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எல்டிஏசி (LDAC) ஆகிய ஆடியோ கோடக் (Audio Codec) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சவுண்ட் பீச்சர்கள் உள்ளன.
ஆகவே, இந்த சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் டால்பி ஆடியோவுக்கு போட்டியாக இருக்கும் டைராக் ஆப்டியோ (Dirac Opteo), அல்ட்ரா பேஸ் டெக்னாலஜி 2.0 (Ultra Bass Technology 2.0) வருகிறது. மேலும், கஸ்டம் ஈகியூ (Custom EQ) மற்றும் ஸ்பாஷியல் ஆடியோ எஃபெக்ட் (Spatial Audio Effect) வருகிறது. 50dB ஹைபிரிட் ஏஎன்சி (Hybrid ANC) சப்போர்ட் உள்ளது.
இதுபோக வாய்ஸ் கால்களுக்கு என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்லேஷன் (Environmental Noise Cancellation), கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி 2.0 (Clear Voice Technology 2.0) சப்போர்ட் வருகிறது. மொத்தமாக 6 மைக்குகள் உள்ளன. ஏஎன்சி பீச்சர்களில் ஸ்மார்ட் ஏஎன்சி அல்கோரிதம் (Smart ANC Algorithm), அடாப்டிவ் ஏஎன்சி (Adaptive ANC) மற்றும் டிரான்பரன்சி மோட் (Transparency Mode) உள்ளது.
இந்த சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் பட்களில் தலா 60mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 460mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 7 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். ஏஎன்சி மோடில் 26 மணி நேரங்களுக்கும், ஸ்டான்டர்ட் மோடில் 43 மணி நேரங்களுக்கும் பேக்கப் கிடைக்கும்.
டைப்-சி வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. டூயல் கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது. ஆகவே, மொபைல், லேப்டாப் என்று ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். மற்ற பீச்சர்களை பார்க்கையில், டச் கன்ட்ரோல், சாட்ஜிபிடி சப்போர்ட், கேமிங் மோட் (Gaming Mode) மற்றும் லோவ் லாக் மோட் (Low Lag Mode) போன்றவை வருகின்றன.
இயர்பட் 4.9 கிராம் எடையும், சார்ஜிங் கேஸ் 46 கிராம் எடையும் வருகிறது. நத்திங் எக்ஸ் ஆப் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சிஎம்எப் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் விலை ரூ.4200 ஆக இருக்கிறது. ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








