Home
Gadgets

சும்மா கிழி.. 460mAh பேட்டரி.. 35dB ஏஎன்சி.. 52 மணி நேர பேக்கப்.. புது CMF பட்ஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சிஎம்எப் பட்ஸ் நியோ (CMF Buds Neo) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், கேமிங் லோவ் லேட்டன்சி, 52 மணி நேர பேக்கப் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சிஎம்எப் பட்ஸ் நியோ அம்சங்கள் (CMF Buds Neo Specifications): 12.4 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. டைட்டானியம்-கோடெட் பிஇடி டோம் (Titanium Coated PET Dome) கிடைக்கிறது. ஜியோமெட்ரிக் ஸ்குவார் டிசைனில் சார்ஜிங் கேஸ் இருக்கிறது. ப்ளூடூத் வி6.0 (Bluetooth v6.0) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது.

சும்மா கிழி.. 460mAh பேட்டரி.. 35dB ஏஎன்சி.. 52 மணி நேர பேக்கப்!

ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) கோடெக் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), மைக்ராசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 6.0 ஓஎஸ் (Android 6.0 OS) மற்றும் ஐஓஎஸ் 13 (iOS 13) அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் கொண்ட மாடல்களில் பயன்படுத்தலாம்.

கஸ்டம் ஈகியூ (Custom EQ), ஸ்டாடிக் ஸ்பாஷியல் ஆடியோ (Static Spatial Audio) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ இருக்கிறது. 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொடுத்து இருக்கிறது. வாய்ஸ் கால்களில் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி (Clear Voice Technology) கொண்ட 4 மைக்குகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பட்டிலும் 2 மைக்குகள் இருக்கின்றன. பட்களில் 45mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 460mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வருவதால், அதற்கு ஏற்ப பேக்கப் கிடைக்கிறது.

ஆகவே, ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால், பட்களில் 11 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆன் செய்யப்பட்டு இருந்தால், 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸ் பேக்கப்பை பார்க்கையில், ஏஎன்சி ஆன் செய்யப்பட்டு இருந்தால், 52 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆன் செய்யப்பட்டால் 30 மணி நேரங்களுக்கு கிடைக்கும்.

டைப்-சி வயர்டு (Type-C Wired) சர்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 5.5 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ மாடலின் பட்களில் IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் IPX2 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

மேலும், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. டச் கன்ட்ரோல்கள் (Touch Controls) வருகிறது. அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) கொடுக்க கேமிங் மோட் (Gaming Mode) கிடைக்கிறது. நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ இருக்கிறது. மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது.

பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ரூ.1,999 ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ரீடெயில் ஸ்டோர்கள் உள்ளிட்டவற்றிலும் விற்பனைக்கு செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
CMF Buds Neo With 52h Total Battery Life Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X