பிச்சிக்குது ஆடியோ + சேல்.. 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்.. 52 மணி நேர பிளேபேக்.. டூயல் டோன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சிஎம்எப் பட்ஸ் நியோ (CMF Buds Neo) மாடலின் விற்பனை தொடங்கிவிட்டது. சிங்கிள் சார்ஜில் 52 மணி நேரங்களுக்கு பிளேபேக் மட்டுமல்லாமல், 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி போன்ற பீச்சர்களை கொடுப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ வெளியாகியது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், நத்திங் மற்றும் சிஎம்எப் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் புதுவித டிசைனையும் இது கொடுத்ததால், விற்பனை மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் முதல்முறையாக விற்பனைக்கு (First Sale) வந்துள்ளது.

ரூ.1999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் கிப்ட் வவுச்சர்கள் கொடுக்கப்படுகின்றன. பிளிப்கார்ட் மட்டுமல்லாமல், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ் ஆகிவற்றிலும் கிடைக்கிறது.
சிஎம்எப் பட்ஸ் நியோ அம்சங்கள் (CMF Buds Neo Specifications): 45mAh பேட்டரியானது பட்களிலும், 460mAh பேட்டரியானது சார்ஜிங் கேஸிலும் கிடைக்கிறது. வழக்கமாக பட்களில் 11 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆன் செய்யப்பட்டால், , 8 மணி நேரங்களுக்கு மட்டுமே பிளேபேக் கிடைக்கும்.
அதேபோல சார்ஜிங் கேஸ் வழியாக 52 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆன் செய்யப்பட்டிருந்தால் 30 மணி நேரங்களுக்கு மட்டுமே பிளேபேக் பெற முடியும். இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 5.5 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும்.
டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்படவில்லை. 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் மற்றும் கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி (Clear Voice Technology) கிடைக்கிறது. இந்த டெக்னாலஜிகளுடன் 4 மைக்குகள் கொடுக்கப்பட்டு உள்ளன. என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) உள்ளது.
ஆகவே, ஆடியோ மற்றும் வாய்ஸ் கால்களில் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட்டை இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ மாடல் கொடுக்கும். டைட்டானியம்-கோடெட் பிஇடி டோம் (Titanium Coated PET Dome) கொண்ட 12.4 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஜியோமெட்ரிக் ஸ்குவார் டிசைனில் கிடைக்கிறது. ப்ளூடூத் வி6.0 (Bluetooth v6.0) கனெக்டிவிட்டி உள்ளது.
கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மட்டுமல்லாமல், மைக்ராசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) கனெக்டிவிட்டி சப்போர்ட் கொடுக்கிறது. ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) கோடெக் கொண்ட மாடலாக இந்த சிஎம்எப் பட்ஸ் நியோ இருக்கிறது. கஸ்டம் ஈகியூ (Custom EQ) கிடைக்கிறது. ஸ்டாடிக் ஸ்பாஷியல் ஆடியோ (Static Spatial Audio) கொடுத்து இருக்கிறது.
ஆகவே, ஸ்டீரியோ ஆடியோ பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இருக்கும். மற்ற பீச்சர்களை பார்க்கையில், பட்களில் IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. IPX2 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சார்ஜிங் கேஸில் கிடைக்கிறது. கேமிங் மோட் (Gaming Mode), நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) சப்போர்ட் மற்றும் டச் கன்ட்ரோல் உள்ளது.


Click it and Unblock the Notifications