விட்ராதீங் ப்ரோ.. ரூ.1,999 போதும்.. 35.5 மணி நேர பேக்கப்.. அடாப்டிவ் ANC.. BIO-ஃபைபர் டிரைவர்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் மியூசிக் பிரியர்களுக்கு ஏற்றபடியான பட்டையை கிளப்பும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும்படி சிஎம்ஃஎப் பட்ஸ் 2ஏ (CMF Buds 2a) வெளியாகியது. ஏப்ரல் மாதம் வெளியாகியும், விற்பனை தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், 2025ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் விற்பனைக்கு வரும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்போது, இந்தியாவில் டிஸ்கவுண்ட் போக விற்பனை தொடங்கிவிட்டது. இந்த சிஎம்ஃஎப் பட்ஸ் 2ஏ மாடலின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சிஎம்ஃஎப் பட்ஸ் 2ஏ இந்திய விற்பனை (CMF Buds 2a India Sale): இந்த சிஎம்ஃஎப் மாடலின் மார்கெட் விலை ரூ.2,199ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல மைந்த்ரா (Myntra) விற்பனையிலும் கிடைக்கிறது. வெயிட்டிங் மோடில் இருந்து நத்திங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் போடுகின்றனர்.

சிஎம்ஃஎப் பட்ஸ் 2ஏ அம்சங்கள் (CMF Buds 2a Specifications): இந்த மாடலில் 12.4 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் பையோஃபைபர் (Biofiber) மற்றும் கஸ்டம் டிபியூ (Custom TPU) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) ஆடியோ கோடெக் மற்றும் அல்ட்ரா பேஸ் டெக்னாலஜி (Ultra Bass Technology) கிடைக்கிறது. டைராக் (Dirac) ஆடியோ அவுட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கஸ்டம் ஈகியூ (Custom EQ) கிடைக்கிறது. இந்த சிஎம்ஃஎப் பட்களில் தலா 43mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 460mAh பேட்டரி கிடைக்கிறது. இதை ஃபுல் சார்ஜ் செய்தால், 35.5 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் பேக்கப் மற்றும் 8 மணி நேரங்களுக்கு பட்கள் மூலம் பேக்கப் கிடைக்கும். இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) கிடைப்பதால், அந்த மோடில் 23 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட மாடலாக இருப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 5.5 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. 42dB நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellations) கிடைக்கிறது. இதுபோக அடாப்டிவ் ஏஎன்சி (Adaptive ANC) மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) கிடைக்கிறது. பிரீமியம் வாய்ஸ் கால் அனுபவம் கொடுக்க 6 மைக்குகள் கிடைக்கின்றன.
இதுபோக என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலிங் (Environmental Noise Cancelling) சப்போர்ட் கிடைப்பதால், அவுட்டோரிலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் அவுட்புட் எதிர்பார்க்கலாம். நாய்ஸ் ரெடக்சனுக்காக பிரத்யேகமாக விண்ட் நாய்ஸ் ரெடக்சன் 2.0 (Wind Noise Reduction 2.0) கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் 10 மீட்டர் ரேஞ்ச் வருகிறது. வழக்கமான டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளது.
ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்க பட்களில் IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அதேபோல சார்ஜிங் கேஸில் IPX2 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி சார்ஜிங் இன்டிகேட்டர் உள்ளது. லோவ் லேக் மோட் (Low Lag Mode) கிடைக்கிறது.
110ms லோவ் லேட்டன்சி கொடுக்கும்படி கேமிங் மோட் வருகிறது. ஃபைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) சப்போர்ட் உள்ளது. டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்களையும் ரூ.1,999 பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த மாடலுடன் வெளியான சிஎம்ஃஎம் பட்ஸ் 2 மற்றும் சிஎம்ஃஎம் பட்ஸ் 2 பிளஸ் மாடல்களின் விற்பனையும் அடுத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications