Home
Gadgets

மொத்த Buds-களையும் செஞ்சிவிட்ட CMF.. 55 மணிநேரம் பேட்டரி, 48dB ஹைபிரிட் ANC, IP55 ரேட்டிங், ChatGPT ஆதரவு!

நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான சிஎம்எப் (CMF), வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று, ஒற்று புதிய ஸ்மார்ட்போன் மற்றும் 3 புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆடியோ தயாரிப்புகளை பொறுத்தவரை சிஎம்எப் பட்ஸ் 2, சிஎம்எப் பட்ஸ் 2ஏ மற்றும் சிஎம்எப் பட்ஸ் 2 பிளஸ் ஆகிய மூன்று செக்கென்ட ஜெனரேஷன் இயர்பட்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன

இதற்கிடையில் அதிகாரப்பூர்வ நிகழ்வுக்கு முன்னதாக சிஎம்எப் பட்ஸ் 2 மாடலின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; கூடவே இதன் விலை நிர்ணயம் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. நேற்று (ஏப்ரல் 14, 2025) சிஎம்எப் நிறுவனத்தின் இந்த வயர்லெஸ் இயர்பட்களுக்கான தயாரிப்பு பக்கம் சிஎம்எப்-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தவறுதலாக நேரலைக்கு வந்தது'; பின்னர் அது அகற்றவும் பட்டது.

மொத்த Buds-களையும் செஞ்சிவிட்ட CMF.. 55 மணிநேரம் பேட்டரி!

அதன் வழியாக சிஎம்எப் பட்ஸ் 2 மாடலின் பெரும்பாலான அம்சங்கள் மற்றும் இது முன்கூட்டியே விற்பனைக்கு வரும் என்கிற விவரம் கிடைத்தது. சிஎம்எப் பட்ஸ் 2 ஆனது அதன் முன்னோடிகளை போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளது. வழக்கமாகின டார்க் க்ரே மற்றும் ஆரஞ்சு நிறங்களிலான கேஸ் மற்றும் புதிய லைட் க்ரீன் விருப்பத்தையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய இயர்பட்ஸ் மாடலில் சிறிய 11மிமீ "PMI" ட்ரைவர்களே உள்ளன, ஆனால் டைராக் ஆப்டியோ ட்யூனிங் மூலம், உயர்தர ஒலி செயல்திறனை உறுதி செய்கின்றன. மேலும் இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது 48dB ஹைப்ரிட் ANC ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனை கொண்டுள்ளன. இது முந்தைய 42dB-ஐ விட அதிகமாகும். கூடுதலாக இந்த பட்ஸ் ஒரு அதிவேக லினிங் அனுபவத்திற்காக ஸ்பேஷியல் ஆடியோவையும் ஆதரிக்கிறது.

இந்த புதிய மாடலில் பேட்டரி லைஃப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிஎம்எப் பட்ஸ் 2 ஆனது ஒரு சார்ஜுக்கு 13.5 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது. கேஸ் உடன் சேர்த்து மொத்த பயன்பாட்டை 55 மணிநேரமாக நீட்டிக்கிறது. இது ஒரிஜினல் மாடலை விட 9.5 மணிநேரம் அதிகமாகும். மேலும் இந்த இயர்பட்கள் இப்போது ப்ளூடூத் 5.4-ஐ ஆதரிக்கின்றன.

கூடவே கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் மூலம் வேகமான மற்றும் நம்பகமான கனெக்டிவிட்டியையும் செயல்படுத்துகின்றன. ஐபி55 ரேட்டிங் உடன் வரும் இந்த இயர்பட்ஸ் வியர்வை மற்றும் தண்ணீருக்கான எதிர்ப்பை உறுதிசெய்கிறது. கடைசியாக நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் காணப்படுவதை போன்ற சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பானது, இந்த இயர்பட்களில் ஸ்மார்ட் செயல்பாட்டையும் சேர்க்கிறது.

விலையை பொறுத்தவரை இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.3,854 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே இது ஏப்ரல் 16 முதல் வாங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை எக்ஸ்பிரஸ் டெலிவரி வழங்கப்படும். ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 22 வரை நிலையான டெலிவரி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 28 இல் அறிமுகமாகும் சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் பிரிக் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை இந்தியாவிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும்

மேலும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆனது பிளாஸ்டிக் எட்ஜ்கள் (Plastic Edges) மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட பேக் பேனல் (Redesigned rear pane) மற்றும் ஒரு ஸ்க்ரு (Screw) ஆகியவற்றை காட்டுகிறது. டீஸர் வீடியோ வழியாக மேட் பினிஷ உடன் கூடிய பளபளப்பான பேக் பேனலை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. ஆனாலும் பேக் பேனல் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது பிளாஸ்டிக் அல்லது அலுமினியத்தால் (Aluminum) செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Buds 2 Design Specifications Features Price Revealed Ahead of India Launch on April 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X