க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...

|

மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான கிளவுட்வாக்கர், வளர்ந்து வரும் இந்திய ஸ்மார்ட் டிவி துறையில் பெரிய அளவில் தடம்பதிக்க முயற்சிக்கிறது. இந்நிறுவனத்தின் மிக சமீபத்திய தயாரிப்பு வெளியீட்டில் 65 இன்ச் 4K UHD ஸ்மார்ட் திரையை வழங்குகிறது.

65 இன்ச் டிவிகளுடன் போட்டியில்

65 இன்ச் டிவிகளுடன் போட்டியில்

இந்த டிவியில்ஆண்ட்ராய்டு 7.0 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட் ஸ்கிரீன்-ல் பிசி மோட் பயன்முறையில் பொருத்தப்பட்டிருப்பதால், பெரிய திரையை தனிப்பட்ட கணினியாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ரூ. 49,999 என்ற மிக மலிவான விலையில் கிடைக்கும் இந்த 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்.டி டிவி, ரூ. 54999 விலைகொண்ட சியோமியின் எம்ஐ டிவி 4 எக்ஸ் 65 இன்ச் உடன் சந்தையில் போட்டியில் உள்ளது.

 நிறைகள்

நிறைகள்

*மலிவான விலை

* சிறந்த உள்ளடக்க களஞ்சியம்

*சைல்டு ஃசேப் மோட்

*பிசி மோட் (தனிப்பட்ட கணினி)

குறைகள்

குறைகள்

* சந்தையில் இதைவிட சிறந்த திரைகள் கிடைக்கின்றன

* ஒலி(ஆடியோ) செயல்திறன் குறைவு

*ப்ளுடூத் இணைப்பு வசதி இல்லை

*குரல்வழி கட்டளை (வாய்ஸ் கமெண்ட்ஸ்) அம்சம் இல்லை

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்

இந்த 65 அங்குல கிளவுட்வாக்கர் ஸ்மார்ட் திரையில் உள்ளார்ந்த 'கன்டென்ட் டிஸ்கவரி இன்ஜின்' (சி.டி.இ) இடம்பெறுகிறது. இது பல்வேறு வகைப்படுத்தப்பட்ட தொகுக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதுடன், யூடியூப், ஜீ5, ஹாட்ஸ்டார் போன்ற பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலங்களிலிருந்து வீடியோக்களை வழங்குகிறது.

ரிவியூ இதோ

ரிவியூ இதோ

இதைதவிர, நீங்கள் மிகவும் பிரபலமான மீடியா ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளான பிரைம் வீடியோஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றிலும் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். கிளவுட்வாக்கரின் முதன்மை ஸ்மார்ட் திரை எவ்வளவு சிறந்தது என்பதை அறிய 65 அங்குல ஸ்மார்ட் திரையை ஒரு வாரத்திற்கு மேலாக சோதித்தோம்.இந்த ஸ்மார்ட் ஸ்கிரீன் பற்றிய எங்களது ரிவியூ இதோ.

வடிவமைப்பு - கவர்ச்சிகரமான எதுவும் இல்லை ஆனால் உருவாக்கல் தரம் சிறப்பு

வடிவமைப்பு - கவர்ச்சிகரமான எதுவும் இல்லை ஆனால் உருவாக்கல் தரம் சிறப்பு

எல்லா பட்ஜெட் ஸ்மார்ட் டிவிக்களும் ஒரே மாதிரியான எல்ஈடி டிவி வடிவமைப்புகள் பின்பற்றும் நிலையில், க்ளவுட்வாக்கர் 65 இன்ச் டிவியும் அதற்கு விதிவிலக்கல்ல. நான்குபுறமும் உள்ள பேசில்கள் தடிமன் குறைவாக உள்ளநிலையில், பிளாஸ்டிக்-ன் தரமும் சிறப்பாக உள்ளது. மவுண்ட் ஸ்டேண்ட் தரமான உலோகத்தால் செய்யப்பட்டிருப்பதால், இந்த 65இன்ச் திரையை சுவற்றில் கூட மாட்டிக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், சர்வதேச நிறுவனங்களான டி.சி.எல், சியோமி, பானாசோனிக் போன்றவற்றுடன் போட்டியிடும் அளவிற்கு தரமானதாக உள்ளது.

இணைப்புத்திறன்- HDMI, USB மற்றும் பிற முக்கிய போர்ட்கள்

இணைப்புத்திறன்- HDMI, USB மற்றும் பிற முக்கிய போர்ட்கள்

அடிப்படையான ப்ளூடூத் வசதி இல்லாததால், வெளிப்புற ஸ்பீக்கர்களை ஒயர்கள் மூலமே இணைக்கமுடியும். இந்த ஒரு குறையை தவிர்த்து, 3 HDMI போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், லேன் போர்ட், ஹெட்போன் போர்ட் என அனைத்து தேவையான அம்சங்களும் உள்ளன.

டிஸ்ப்ளே - 65 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி திரை

டிஸ்ப்ளே - 65 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி திரை

பூனையை கூட யானை அளவிற்கு காட்டவல்ல இந்த 4K அல்ட்ரா ஹெச்டி 65 இன்ச் திரை, 3840 x 2160 பிக்சல் ரெசல்யூசன் மற்றும் எச்ஆர்டி10 அம்சங்களை கொண்டுள்ளது. ஆயினும்கூட, 65 அங்குல ஸ்மார்ட் திரையில் 4 கே எல்இடி பேனல் யூடியூபில் 2160p வீடியோக்களை சொந்தமாக ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களது பரிசோதனையில் 4K வீடியோக்களை யூஎஸ்பி மூலம் ப்ளே செய்யபோதும் எந்தவொரு செயல்திறன் குறைபாடும் இல்லை.

கன்டென்ட் லைப்ரரி

கன்டென்ட் லைப்ரரி

டிரெண்டிங், லைவ் நியூஸ், ஹாட்ஸ்டார், மியூசிக், சீரிஸ், ஆப்ஸ் பிரிவு, திரைப்படங்கள் மற்றும் பல என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. கிளவுட்வால்கரின் சி.டி.இ. மார்வெல் ஹீரோஸ் மற்றும் டிஸ்னி டிலைட் என்ற பெயர்களால் பிரத்யேக பிரிவுகளையும் உருவாக்கியுள்ளது, அங்கு நீங்கள் முறையே மார்வெல் ஹீரோ மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட டிஸ்னி திரைப்படங்களிலிருந்து அனைத்து திரைப்படங்களையும் காணலாம். மூவி பாக்ஸ், ஆப் ஸ்டோர், வலை உலாவி, யூ.எஸ்.பி மீடியா பிரிவு மற்றும் ஆப்ஸ் பிரிவு என அனைத்தையும் பயன்படுத்தலாம்.

ரிமோட் கண்ட்ரோலர்

ரிமோட் கண்ட்ரோலர்

பெரிய பருமனான ரிமோட்-ஐ நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுடன் பெறுவதற்கு இணையாக இல்லை என்பதால் இது ஒரு நல்ல முயற்சி. UI முழுவதும் வசதியாக செல்ல இது உங்களை அனுமதிக்கிறது என்றாலும், ஏர் மவுஸ் அம்சம் ஒரு வலிநிறைந்த அம்சம் தான். ஸ்டாண்டர்ட், டைனமிக், சாப்ட், விவிட் மற்றும் யூசர் என ஐந்து 'பிக்சர் மோட்களை' வழங்குகிறது. டைனமிக் மோட்-ல் சிறந்த வெளியீட்டைப் பெற்றோம்.

ஹார்ட்வேர் மற்றும் செயல்திறன்

ஹார்ட்வேர் மற்றும் செயல்திறன்

கிளவுட்வாக்கர் 65 அங்குல ஸ்மார்ட் ஸ்கிரீன் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியுடன், டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 73 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட் திரையில் கிராபிக்ஸ்ஐ கையாள குவாட் கோர் மாலி -450 ஜி.பீ.யூ உள்ளது. அடிப்படையான வன்பொருள் அமைப்புகள் தான் என்றாலும், எந்தவொரு செயல்திறன் குறைபாடும் இன்றி செயல்படுகிறது.

ஏன் இதை வாங்க வேண்டும்?

ஏன் இதை வாங்க வேண்டும்?

தற்போது இந்திய சந்தையில் மிகக் குறைந்த அளவு பட்ஜெட் 65 அங்குல ஸ்மார்ட் டிவிகளே உள்ளன. இது கிளவுட்வாக்கர் 65 அங்குல ஸ்மார்ட் ஸ்கிரீனை ஒரு நல்ல விருப்பமாக மாற்றுகிறது. 4K அல்ட்ரா ஹெச்டி அம்சம் இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட இயக்க முறைமை இல்லாதது, நல்ல ஒலிபெருக்கிகள் மற்றும் புளூடூத் இணைப்பு ஆகியவை இல்லாதது மிகப்பெரிய குறையே. மேலும் ரூ5000 செலவுசெய்ய தயார் என்றால், சில அம்சங்களில் இதைவிட சிறப்பானதை வழங்கும் 65 இன்ச் எம்ஐ 4X டிவி-யை தேர்ந்தெடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
CloudWalker 65-inch 4K UHD Smart Screen Review : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X