சூப்பர் மவுஸ் அறிமுகம்.. மின்மினிப்பூச்சி மாதிரி பின்னாடி லைட்.. ஆனா RGB கலர் லைட்.. விலை என்ன தெரியுமா?
லேப்டாப் (Laptop), கம்ப்யூட்டர் (Computer) எது உங்களிடம் இருந்தாலும், கட்டாயம் ஒரு மவுஸ் (Mouse) ஆவது தேவைப்படும். சந்தையில் பல ரகங்களில், பல விலையில் மவுஸ்கள் இப்போது விற்பனை செய்யப்பட்டாலும் சில யுனிக்கான மவுஸ்கள் இப்போது தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், சமீபத்தில் மிகவும் விதியசமான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மவுஸ் சாதனம் தான் இந்த செர்ரி XTRFY M50 வயர்லெஸ் கேமிங் மவுஸ் (XTRFY M50 wireless gaming mouse). இது ஜெர்மனி நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மவுஸ் சாதனம் பார்ப்பதற்கு மின்மினிப்பூச்சியை (Firefly) போல காட்சியளிக்கிறது. மின்மினிப்பூச்சி போல வளைந்த பாடியுடன், பின்னாடி RGB லைட்டை கொண்டுள்ளது.

செர்ரி XTRFY M50 வயர்லெஸ் கேமிங் மவுஸ் (XTRFY M50 wireless gaming mouse):
இந்த புதிய செர்ரி XTRFY M50 வயர்லெஸ் கேமிங் மவுஸ் சாதனம் பிக்ஸ்ஆர்ட் 3311 சென்சார் மற்றும் ஹஅனோ ஹூராங் மூலம் வடிவமைக்கப்பட்ட மெயின் கண்ட்ரோல் மைக்ரோஸ்விட்ச்சை இது கொண்டுள்ளது. இது 5000 வரையிலான நான்கு விதமான DPI லெவலை ஆதரிக்கிறது. இதன் ரோலிங் ரேட்டை நீங்கள் அட்ஜஸ்ட் செய்யும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேட்டிங் 125 முதல் 1000Hz இடையில் மிகவும் துல்லியமான ரெஸ்பான்ஸை வழங்குகிறது.
இந்த புதிய கேமிங் மவுஸ் சாதனம் 122.4mm அளவுடன் 66mm தடிமன் உடன் 39mm உயரத்துடன் வருகிறது. இந்த செர்ரி XTRFY M50 வயர்லெஸ் கேமிங் மவுஸ் வெறும் 87 கிராம் (weight) எடையுடன் வருகிறது. இந்த மவுஸ் சாதனத்தின் வடிவமைப்பு உங்கள் கைக்கு அடக்கமாக இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் கைக்கு களைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.
இந்த புதிய கேமிங் மவுஸ் சாதனத்தில் உள்ள RGB லைட்டிங் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இதன் ஆர்ஜிபி லைட் ஸ்ட்ரிப் (RGB lighting strip) மகிவும் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிறங்களை உங்கள் விருப்பத்திற்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ள அனுமதிக்கும் விருப்பங்களை கொண்டுள்ளது. இந்த மவுஸ் ட்ரிபிள் மோட் கனெக்ஷனை (triple-mode connections) ஆதரிக்கிறது.

மின்மினிப்பூச்சி போல வளைந்த பாடியுடன், பின்னாடி RGB லைட்.. புது கேமிங் மவுஸ்:
அதாவது, இந்த மவுஸ் 2.4GHz வயர்லெஸ் கனெக்ஷன், ப்ளூடூத் 5.2 கனெக்ஷன் மற்றும் USB வயர்டு கனெக்ஷன் என்று மூன்று கனெக்ஷன் அம்சங்களை கொண்டுள்ளது. இது 100 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் முழுமையாக வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்யப்படுகிறது. அதேபோல், இதனை நீங்கள் பயன்படுத்தும் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
ஆம், இதில் இன்டலிஜெண்ட் (intelligent charging) அம்சமும் இடம்பெறுகிறது. இந்த புதிய செர்ரி XTRFY M50 வயர்லெஸ் கேமிங் மவுஸ் (XTRFY M50 wireless gaming mouse) சாதனம் பிளாக் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது. இதன் விலை சீனாவில் $76 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் தோராயமாக ரூ. 6300 விலை என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








