நம்ப முடியாத உலகின் 10 பிரம்மாண்டமான கேமரா லென்ஸ்கள்! இதை வாடகைக்கும் பயன்படுத்தலாம் தெரியுமா?

|

புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் பார்த்ததும் பொறாமைப்படும் விதத்தில் உருவாக்கப்பட்ட 10 பிரம்மாண்டமான விலை உயர்ந்த கேமரா லென்ஸ்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உண்மையில் சில லென்ஸ்களை பார்த்ததும் அம்மாடியோ என்று வாயைப் பிளக்காமல் இருக்கமாட்டீர்கள். முக்கியமாக இது சத்தியமாக என்ற சந்தேகமும் எழக்கூடும்.

1. Nikon 6mm Fisheye Lens

1. Nikon 6mm Fisheye Lens

இந்த Nikon 6mm Fisheye Lens f-2.8 தான் உலகின் அகலமான லென்ஸாக இருக்கிறது. இந்த லென்ஸ் சும்மர் 220 டிகிரி வரையில் உள்ள கோணத்தைக் கவர் செய்கிறது. தற்பொழுது இந்த வகை லென்ஸ் உற்பத்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் உங்களுக்கு இந்த லென்ஸ் ஈபே (eBay) தளத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

2. Carl Zeiss 50mm Planar f/0.7

2. Carl Zeiss 50mm Planar f/0.7

உண்மையில் சந்திரனின் இருண்ட பக்கத்தைப் படம்பிடிப்பதற்காக நாசா இந்த லென்ஸை உருவாக்கியது. பார்ரி லிண்டனில் (Barry Lyndon) உள்ள மெழுகுவர்த்தி விளக்கு காட்சியைப் படமாக்க ஸ்டான்லி குப்ரிக், இந்த லென்ஸ்களை தான் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லென்ஸ்கள் இன்றும் Kubrick Collection தளத்தின் வழியாக வாடகைக்குக் கிடைக்கிறது.

கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

3. Canon 5200mm F/14 Mirror Lens

3. Canon 5200mm F/14 Mirror Lens

தொடர்ச்சியான கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் லென்ஸின் ஃபோக்கல் லெந்த்தை சுமார் 5200mm வரை அதிகரிக்க முடியும் என்பதற்கான சான்று தான் இந்த Canon 5200mm F/14 Mirror Lens. இந்த லென்ஸை பயன்படுத்தி 18-32 மைல் தொலைவில் நிகழும் திருமண நிகழ்வுகளைச் சரியான ஃபோகஸ் உடன் படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4. Zeiss Apo Sonnar T1700mm

4. Zeiss Apo Sonnar T1700mm

இந்த F/4 லென்ஸ் 2006 ஆம் ஆண்டில் Zeiss நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இப்பொழுது இந்த லென்ஸை நீங்கள் வாங்க விரும்பினால் Zeiss நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த லென்ஸ் விஞ்ஞானிகளுக்கோ அல்லது இராணுவத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை, புகைப்படக் கலைஞர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரம்மாண்டமே இந்த லென்ஸ் 564 பவுண்டு எடை என்பது தான்.

செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.!செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.!

5. Leica 1600mm f/5.6 Telephoto

5. Leica 1600mm f/5.6 Telephoto

The Leica 1600mm பல்வேறு சிறப்புகளைக் கொண்ட லென்ஸ், உலகின் மிக விலை உயர்ந்த லென்ஸாக இந்த லென்ஸ் மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த லென்ஸை துபாயைச் சேர்ந்த, ஷேக் சவூத் பின் முகமது அல் என்பவர் வாங்கியுள்ளார். ஆனால் இன்று வரை ஒரு புகைப்படத்தைக் கூட அவர் கிளிக் செய்யவில்லை என்பது தான் சோகம்.

6. Canon EF 1200mm f/5.6

6. Canon EF 1200mm f/5.6

சுமார் 36 பவுண்ட் எடையுள்ள, இந்த Canon EF 1200 மிமீ லென்ஸில் ஆட்டோஃபோகசிங்கிற்காக அல்ட்ரா சோனிக் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த லென்ஸை உருவாக்க தேவைப்படும் கிரிஸ்டல் வளர நீண்ட நேரம் எடுக்கும் என்பதனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் ஒன்று அல்லது இரண்டு லென்ஸ்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.!பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.!

7. Sigma 200-500mm f/2.8 APO EX DG

7. Sigma 200-500mm f/2.8 APO EX DG

சிக்மா லென்ஸ்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மிகச்சிறந்த லென்ஸான இந்த Sigma 200-500mm லென்ஸ் சுமார் 35 பவுண்டுகள் எடையும், 726 மிமீ நீளமும் கொண்டது. உலகின் முதல் f-2.8 f-ஸ்டாப் கொண்ட முதல் 500 மிமீ லென்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

8. Rokinon 650-1300mm f/8-16

8. Rokinon 650-1300mm f/8-16

பட்ஜெட் விலையில் தரமான போட்டோ எடுக்க விரும்பக் கலைஞர்களுக்கு இந்த Rokinon 650-1300mm லென்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். இந்த லென்ஸின் f-ஸ்டாப் வரம்பு 8-16 ஆகும், எனவே இந்த லென்ஸை பயன்படுத்திக் குறைந்த-ஒளியில் நிச்சயம் தரமான படப்பிடிப்பு நிச்சயமாக இருக்காது என்பது பயனர்களின் கருத்து.

வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).!வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).!

9. Sigma 4.5mm f/2.8

9. Sigma 4.5mm f/2.8

மேக்ரோ புகைப்படங்களை எடுப்பதற்காக இந்த Sigma 4.5mm f/2.8 லென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அகலமான லென்ஸ்களில் 4.5mm உடன் வெளியிடப்பட்டுள்ள லென்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். அறிவியல் மற்றும் கலை பயன்பாட்டிற்காக இந்த லென்ஸ் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

10. Leica 50mm f/.95

10. Leica 50mm f/.95

இந்த Leica 50mm லென்ஸ் அனைத்து புகைப்படக்காரருக்கும் பரிந்துரைக்கப்படும் சிறந்த லென்ஸ் ஆகும். F/1.4
உடன் வரக்கூடிய சிறந்த 50 மிமீ லென்ஸாகக் இந்த லென்ஸ் கருதப்படுகிறது, ஆனால் லைகா இதை 1975 ஆம் ஆண்டில் நோக்டிலக்ஸ்-எம்(Noctilux-M) மூலம் அடுத்தகத்திற்கு எடுத்து சென்றது.

Best Mobiles in India

English summary
Check Out 10 Of The World's Most Incredible Camera Lenses Ever Made : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X