ஏழைகளின் AC.. 7 செங்கல்.. 1 டேபிள் Fan இருந்தா போதும்.. பாரம்பரிய முறையில் வீட்டை குளிர்விக்கலாம்.. எப்படி?
இந்தியாவில் வெப்பம் கொடூரமாகி வருகிறது. மக்களை வறுத்தெடுக்கும் வகையில் தினசரி வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பல வழிகளில் வெப்பத்தை தணிக்க முயன்று வருகின்றனர். சிலர் சொந்தமாக ஏசி (AC) செய்து வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பித்து வருகின்றனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் பல இடங்களில் 50°C வரை வெப்பம் அதிகரித்துள்ளது. மக்கள் வெய்யிலின் தாக்கத்தினால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவங்கி வருகின்றனர். ராஜஸ்தான் (Rajasthan) போன்ற வறண்ட மாநிலங்களில் வெய்யிலின் தாக்கத்தை பற்றி நாம் சொல்லவே வேண்டாம், நெருப்பை போல் காற்று வீசத்துவங்கியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஏசி (AC) மிக முக்கியமானதாகிறது.

ஏழைகளின் AC.. 7 செங்கல்.. 1 டேபிள் Fan இருந்தா போதும் (AC of the poor 7 bricks and 1 table fan is enough):
இருப்பினும், எல்லோராலும் ஏசி வாங்க முடியாத நிலையே இங்குள்ளது. குறைப்பாக ஏழை மக்களின் நிலை இங்கு மோசமாகவே உள்ளது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க இப்போது மக்கள் பல பாரம்பரியமான முறைகளை (Traditional cooling method) இப்போது பயன்படுத்த துவங்கியுள்ளனர். அப்படி, ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் சொந்தமாக ஒரு பாரம்பரிய ஏசி கூலர் (traditional ac cooler) சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்.
இன்றைய தினத்தில் ஒரு சாதாரண ஏசி வாங்க வேண்டுமென்றால் குறைந்தது ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை சேலவாகிறது. இதை எல்லோராலும் வழங்க முடியாத, காரணத்தினால், மக்கள் இப்போது பல யுக்திகளை கையாண்டு புதிய-புதிய முறைகளில் ஏர் கூலர் போன்ற சாதனங்களை சொந்தமாக உருவாக்கி பயன்பெற்று வருகின்றனர். அப்படி உருவானது தான் இந்த புதிய சீப் ஏசி (Cheap AC) சாதனம்.
இதன் பெயர் குறிப்பிடுவது போல, சீப் (cheap) என்பது மிகவும் மலிவான விலையை குறிக்கிறது. ஏசி (AC) என்பது ஏர் கண்டிஷனர் (Air Conditioner) போன்ற குளுமையை குறிப்பிடும் சாதனமாக இயங்குகிறது. இந்த சீப் ஏசியை நீங்களும் கூட உங்கள் வீட்டில் சொந்தமாக உருவாக்கலாம். இது மிகவும் சுலபமானது. இதை உருவாக்க உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.

எப்படி பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே ஏசி உருவாக்குவது?
உங்களுக்கு 7 செங்கல் (Bricks), 1 டேபிள் பேன் (Table Fan), சிறியளவு வாட்டர் டியூப் (water tube) மற்றும் 1 சிறிய மீன் தொட்டி மோட்டார் (fish tank motor) இருந்தால் போதும் இந்த சீப் ஏசியை நீங்களே உருவாக்கலாம். இந்த சீப் ஏசியை செய்ய நீங்கள் முதலில் ஒரு பெரிய தட்டில் 7 செங்கலை காற்று வரும் அளவிற்கு சிறிய இடைவெளி விட்டு அடுக்க வேண்டும்.
பிறகு அதன் மேல் தண்ணீர் விழுவது போல, தண்ணீர் டியூபை (water tube) சுற்றி வைக்க வேண்டும். மேற் பகுதியில் உள்ள செங்கலில் இருந்து, கீழே பெரிய தட்டில் நீர் நிரம்பும் வரை மட்டும் தண்ணீரை நிரப்பவும். ஒரு டியூப் முனையை கீழே தட்டில் தண்ணீரை உறிஞ்சும் விதத்தில் வைக்க வேண்டும். மாரு முனை செங்கல் மேற்பகுதிக்கு வரும் படி வைக்க வேண்டும்.
இப்போது உங்கள் வீட்டில் உள்ள டேபிள் ஃபேனை நீங்கள் உறங்கும் அறையில் வைக்கவும். இந்த பேன்னிற்கு முன்பு நீங்கள் அடுக்கி வைத்துள்ள செங்கல் நிறைந்த தட்டை வைத்து, மீன் டேங்க் மோட்டாரை ஆன் செய்ய வேண்டும். இப்போது தண்ணீர் தானாக செங்கல் மேல் விழும். ஈரமான செங்களின் இடைவெளியில் டேபிள் பேன் (table fan) காற்று கடக்கும் பொழுது, சில்லென்ற காற்று உங்கள் அறையை நிரப்பும்.
இந்த முறையில் உங்கள் அறையின் வெப்பத்தை 5°C முதல் 10°C வரை குறைக்க முடியுமென்று கூறப்படுகிறது. ராஜஸ்தானை சேர்ந்த நபர் உருவாக்கிய இந்த சீப் ஏசி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிக செலவின்றி உங்கள் வீட்டு அறையை குளிர்விக்க விரும்பினால் இந்த ஐடியாவை பின்பற்றுங்கள். ஒன்றிற்கு மேற்பட்ட சீப் ஏசி செட்டப்பை உங்கள் அறையில் நிறுவினால் கட்டாயம் ரூம் முழுமையாக குளிர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








