CES 2022: மிகவும் எதிர்பார்த்த ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம்.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகிறது என்றே கூறலாம். இந்நிலையில் மைக்ரோ எல்இடி, நியோ கியூஎல்இடி மற்றும் லைஃப் ஸ்டைல் மாடல்களை சிஇஎஸ் 2022-இல் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தரமான புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக சிறந்த
மென்பொருள் வசதியுடன் இந்த சாதனங்களை கொண்டுவந்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல் இந்த டிவி மாடல்கள் Nvidia GeForce Now, Stadia மற்றும் Utomik கேம் ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பயன்படுத்தி கேம்களை விளையாடஅனுமதிக்கிறது.

மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவிகள்
மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவிகள் மூன்று திரை அளவுகளில் கிடைக்கும், அவை 110-இன்ச், 101-இன்ச், 89-இன்ச் ஆகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல் மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவிகள் 20-பிட் கிரேஸ்கேல் டெப்த், 100% DCI, Adobe RGB வண்ண வரம்பு, 99.99 சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

இந்த புதிய மைக்ரோ எல்இடி ஸ்மார்ட் டிவிகளில் 4கே ரெசல்யூஷன், Dolby Atmos ஆதரவு, மல்டி-வியூ மோட், ஆர்ட் மோட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நியோ கியூஎல்இடி
நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் ஆனது 32-இன்ச் முதல் 83-இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நியோ கியூஎல்இடி மாடல்கள் ஆனது நியோ குவாண்டம் பிராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. அதேபோல் இந்த அதிநவீன ஸ்மார்ட் டிவிகள் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், EyeComfort mode உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது.

நியோ QLED ஸ்மார்ட் டிவிகளில் 4கே மற்றும் 8கே ரெசல்யூஷன் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் 2022 லைஃப்ஸ்டைல் ஸ்மார்ட் டிவி
இந்த இரண்டு வரிசைகளைத் தவிர, சாம்சங் 2022 லைஃப்ஸ்டைல் ஸ்மார்ட் டிவிகளையும் வெளியிட்டது. குறிப்பாக Frame, Serif மற்றும் Sero ஆகிய மூன்று வரம்புகளில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் 32-இன்ச் முதல்
85-இன்ச் அளவுகளில் இந்த ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாம்சங் 2022 லைஃப்ஸ்டைல் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 4கே ரெசல்யூஷனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் தனித்துவமான சிப்செட் மற்றும் தரமான பல அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, சாம்சங்கின் சமீபத்திய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில்
இந்த சாதனங்கள் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications